கடந்த காலங்களில் தமிழீழம் கோரிய முதல் இடமாக திகழ்ந்த வட்டுக்கோட்டையை திட்டமிட்டு அழிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக கலாநிதி சிதம்பரமோகன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அவர் தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட அவர், சங்கானையை நகரசபையாக தரம் உயர்த்துமாறும், வட்டுக்கோட்டையை பிரதேச சபையாக மாற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
‘தமிழீழம் கேட்ட வட்டுக்கோட்டையில், தந்தை செல்வா காலம் தொடக்கம் இன்று வரை பொது மலசலம்கூட இல்லை’. ‘ஒரு காவல்நிலையம் மட்டும் உள்ளது’.எனவே, திட்டமிட்டு வட்டுக்கோட்டை அழிக்கப்படுகின்றதா? என்றும் கலாநிதி சிதம்பரமோகன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என அரச அதிகாரிகள் இதன்போது பதிலளித்திருந்தனர்.