தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை; 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

1tha தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை; 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றுயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்வித பேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலி செலுத்த வேண்டுமென நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு கேட்டுள்ளது.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நான்காவது உலக தமிழ் ஆராய்ச்சி
மாநாடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டின் இறுதிநாளான 10ஆம் திகதி பொலிஸார் குழப்பத்தை ஏற்படுத்தினர். இதன்போது, அவர்கள் மின்கம்பிகளை சுட்டனர். மின்கம்பிகள் மக்கள் கூட்டத்தின் மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி 9 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.