போர் ஓய்ந்திருந்த காலம், கிளிநொச்சி நகரத்தின் தெருக்களில் கடைகளின் முன்பாக வைக்கப் பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகளில் கார்த்திகைப் பூ சின் னத்துடன் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பாகியது. சனங்கள் எல்லாம் பெருமையோடும் வியப்போடும் பார்த்திருந்த அந்தக் காட்சி இன்னமும் நெஞ்சில் பசுமையாக இருக் கிறது. செய்தி தொடங்கும்போது பாயும் புலி தோன்றும் செய்திச் சமிக்கைக் காட்சியும் தனித்துவமாகப் புல் லரிக்கச் செய்தது. எங்கள் தேசிய தலைமைமயின் சிந்தனையில் 2005ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் நாளன்று, கிளிநொச்சியில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி துவங்கப்பட்டது. தமிழர் தேசத்திற்கென ஒரு தேசியத் தொலைக்காட்சியாக அது அடையாளம் பெற்றதும் பெருமை.
நிதர்சனப் பிரிவு
உலகில் காணொளி இதழ்கள் குறித்து ஒரு நாட்டின் அரசே சிந்திக்காத நிலையில், விடுதலைப் புலிகள் ஒளிவீச்சு என்ற கணொளி இதழைக் குறித்துச் சிந்தித்தமை எங்கள் விடுதலை இயக்கத்தின் மாறுபட்ட மற்றும் தனித்துவ சிந்தனை எனலாம். நிதர்சனம் வழியாக உருவாக்கப்பட்ட குறுந்திரைப்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள் மற்றும் காணொளிப் படைப்புக்கள் என்பன அன்று தமிழீழ தேசத்தின் நிலவரங்களைப் பல்வேறு படைப்புக்களாக உலகம் எங்கும் கொண்டு சேர்த்தன. இந்த நிலையில் நிதர்சனம் நிறுவனத்தின் மற்றொரு பரிணாமமாக தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் தோற்றம் அமைந்தது.
அந்த வகையில் மார்ச் 26 என்பது தமிழீழ ஊடக வரலாற்றில் ஒரு முக்கிய நாளாக நினைவுகொள்ளப்படுகிறது. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி என்பது இலங்கையில் இருந்து முதன் முதலில் ஒளிபரப்பான செய்மதித் தொலைக்காட்சியாகும். அந்த வகையிலும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு முன்னோடிகரமான செயற்பாட்டைச் செய்தது. கிளிநொச்சியில் இருந்து உலகப் பரப்பு எங்கும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி என் பயணத்தைத் தொடங்கியது. ஒரு போராட்ட இயக்கம் தனது அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாளத்தை உலகிற்கு காட்சியாக எடுத்துச் செல்ல முயன்ற முக்கிய கட்டமாகும். ஆயுதப் போராட்டத்துடன் இணைந்து, தகவல் மற்றும் காட்சியின் சக்தியையும் உணர்ந்த விடுதலைப் புலிகள், ஊடகங்களை ஒரு அரசியல் ஆயுதமாவும், ஒரு தேசிய அடையாளமாகவும் பயன்படுத்தினார்கள்.
புலிகளின் குரல்
ஒரு கெரில்லா இயக்கமாகத் தொடங்கிய விடுதலைப் புலிகள் ஆரம்ப காலங்களில், தகவல் பரிமாற்றம் மிகவும் குறுகிய வளங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. கையெழுத் துப் பிரசுரங்கள், சிற்றிதழ்கள், பின்னர் காசெட் பதிவு செய்யப்பட்ட உரைகள் போன்றவை மூலம் மக்கள் மத்தியில் தொடர்பாடலை மேற்கொண்டனர். முதலில் அச்சு ஊடங்களில் பெரும் பரிமாணத்தைக் காட்சிய புலிகளின் ஊடகத்துறை காலப்போக்கில், ஒழுங்கமைக் கப்பட்ட ஊடக அமைப்புகளாக வளர்ந்தன. அதில் முக்கியமானதாகத் திகழ்ந்தது வானொலி மற்றும் தொலைக்காட்சி. முதலில் வானொலித்துறை வாயிலாக விடுதலைப் புலிகளின் தொடர்பாடல் இயகத்தின் செயற்பாடுகளை வளர்க்க உதவியது.
‘புலிகளின் குரல்’ எனப் பரவலாக அறியப்பட்ட ஒலிபரப்பு சேவை, தமிழீழத்தின் உள்நாட்டிலும் வெளியுலகி லும் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியை செய்தது. விடுதலைப் புலிகளுக்கும் போர்க்களத்திற்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பாடல் பாலமாகச் செயற்பட்டது. இந்த வானொலி சேவை வழியாக செய்தி, அரசியல் பகுப்பாய்வு, வீரச்சாவு அறிவிப்புகள், நினை வேந்தல்கள், பாடல்கள், கலாச்சார நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பப்பட்டன.போரின் சூழ்நிலையிலும் தொடர்ந்து ஒலித்த இந்த வானொலி, ஒரு சாதாரண ஊடகமாக அல்லாமல், போராட்டத்தின் குரலாகவும் உணர்வுகளின் ஊற்றாகவும் விளங்கியது.
தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
அதே நேரத்தில், காட்சியின் தாக்கத்தை உணர்ந்த இயக் கம், தொலைக்காட்சி துறையிலும் தன்னிச்சையான முன் னேற்றத்தை அடைந்தது. மார்ச் 26 அன்று துவங்கப்பட்ட தமிழீழ தேசியத் தொலைக்காட்சி, ஒரு மாற்று காட்சி உலகத்தை உருவாக்க முயன்றது. செய்தி நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள், போராளிகளின் வாழ்க்கை, மக்களின் துயரங்கள், அரசியல் கருத்துக்கள் ஆகியவை இதில் பிரதிபலித்தன. இத்தொலைக்காட்சி, தமிழீழம் எனும் அரசியல் கனவை காட்சியாக வடிவமைத்ததோடு, மிகவும் மக்கள் எழுச்சியும் வீரத்தின் கவர்ச்சியும் கொண்ட காட்சியூடகமாக உலக தமிழர்களிடையே உணர்வுப் பாலம் அமைத்தது.
இந்த ஊடகப் பயணம் வெறும் தகவல் பரி மாற்றமாக மட்டுமல்லாது, ஒரு அடையாள அரசியலின் வெளிப்பாடாகவும் இருந்தது. பொதுமக்களின் வாழ்வியல், துன்பங்கள், எதிர்ப்புகள் ஆகியவை காட்சியாகவும் குரலாகவும் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம், உலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஊடகங்கள் வழியாக போராட்டத்தின் நியாயத்தை விளக்குவது, ஆதரவைப் பெறுவது, எதிர்ப்புகளை எதிர்கொள்வது ஆகியவை இந்த முயற்சியின் நோக்கங்களாக இருந்தன. சர்வதேச ஊடகங்கள் பலவும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் காட்சிகளை தமது செய்திகள், நிகழ்வுகளில் மீள் ஒளிபரப்புச் செய்தன. விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ காட்சி ஊடகம் என்பதால் தமிழீழத்தின் காட்சிகள் நம்பகமாக அதில் வெளியானது.
தமிழர் தேசத்தின் தேசிய ஊடகங்கள்
இன்னொரு முக்கிய அம்சம், இந்த ஊடகங்கள் தமிழ் இனத்தின் கலாச்சார மேடையாகவும் செயல்பட்டது. பாடல்கள், கவிதைகள், நாடகங்கள், நினைவேந்தல்கள் ஆகியவை ஊடகங்களில் இடம் பெற்றன. இதன் மூலம், போராட்டம் ஒரு ஆயுதப் போராட்டமாக மாத்திரமின்றி, ஒரு கலாச்சார இயக்கமாகவும் உருவெடுத்தது. இளம் தலைமுறையினருக்கு ஒரு தேசிய உணர்வை ஊட்டும் பணியையும் இந்த ஊடகங்கள் செய்தன. வாழ்வியல் கோலம் சார்ந்த நிகழ்வுகள், கல்வி சார்ந்த நிகழ்வுகள், தொன்மை சார்ந்த நிகழ்வுகள் போன்று பல புதிய புதிய நிகழ்ச்சிகள் வழியாக தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி தன்னை தேசிய காட்சி ஊடகமாக இன்னமும் பரிணாமிக்க வைத்தது.
ஊடகப் பயணம் சவால்களற்றதல்ல. அது சாதார ணப் பயணமும் இல்ல. தொழில்நுட்பக் குறைபாடுகள், வளங்களின் பற்றாக்குறை, இலங்கை அரசின் இடையூறுகள், தாக்குதல்கள் ஆகியவை தொடர்ந்து நிகழ்த்தப்பட்டன. இருந்தபோதிலும், குறைந்த வளங்களுடன் கூட ஒரு முழுமையான ஊடக அமைப்பை உருவாக்கிய முயற்சி, அதன் தனித்துவத்தைக் காட்டியது. இறுதிப்போரின் காலம் வரையில் இத் தொலைக்காட்சி தனது பயணத்தை கொண்டு சென்றது. இறுதிக்காலத்தில் இன்றைய ஊடக வடிவமான டிஜிட்டல் வடிவிலும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி இணையங்களில் காணக் கிடைத்தது. அந்த வகையிலும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி முன்னோடியானது.
இன்று, இந்த ஊடக அமைப்புகள் தாயகத்தில் செயலிழந்த நிலையில் இருந்தாலும், அவை விட்டுச் சென்ற தாக்கமும் வகிபாகமும் இன்னும் ஈழ மக்களின் நினைவுகளில் வாழ்கிறது. புலிகளின் குரல் வானொலியும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியும் உருவாக்கிய குரலும் காட்சியும், ஒரு காலத்தின் சாட்சிகளாகவும், ஒரு மக்களின் அரசியல் மற்றும் பண்பாட்டு போராட்டத்தின் பதிவுகளாகவும் நிற்கின்றன. இன்றும் அவற்றின் பதிவுகள் டிஜிட்டல் ஊடகங்களில் வலம் வருகின்றன. உண்மையில் தமிழர் தேசத்தின் தேசிய ஊடகங்களுக்கு ஒருபோதும் அழிவில்லை. இன்றைய தலைமுறையும் இயக்கப் பாடல்களையும் காட்சிகளையும் உணர்வுடன் கேட்பதும் பார்ப்பதும் தொடர்கின்றது என்பதற்கு அன்று இந்த ஊடகங்கள் ஆற்றிய பணியே அடிப்படை. தமிழர்களின் தேசத்தின் தேசிய ஊடகங்களாக இவை என்றும் காலத்தை வழிப்படுத்தும்.



