தமிழரசு கட்சிக்கு எதிராக யாழ்.நீதிமன்றில் வழக்கு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச் செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை யாழ். நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மார்க்கண்டு நடராசா வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் எதிராளிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் அடுத்த தவணை நவம்பர் 18 ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.