ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி தனக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச நன்றியை தெரிவித்துள்ளார்.



