தபால்மூல வாக்களிப்பு செவ்வாயுடன் நிறைவு!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு செவ்வாய்க்கிழமை (28) உடன் நிறைவடைகிறது. வாக்களிப்புக்கான  காலம் இனி நீட்டிக்கப்படாது. ஆகவே வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ள சகல அரச உத்தியோகத்தர்களும் தவறாமல் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு  அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் அதிகார சபைகளுக்கான உத்தியோகபூர்வ வாக்கெடுப்பு எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு இம்முறை 647,495 அரச உத்தியோகத்தர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கமைய கடந்த 24, 25 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கெடுப்பு நடைபெற்றது.இன்றும், நாளையும்  வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. தபால்மூல வாக்கெடுப்பு வழங்கப்பட்ட காலவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளதால் இனி  வாக்களிப்புக்கு அவகாசம் வழங்க்கபடமாட்டாது.

ஆகவே தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்ற சகல அரச உத்தியோகத்தர்களும் தவறாமல் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நேற்றைய தினம் விசேட தபால் சேவை ஊடாக விநியோகிக்கப்பட்டன. வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவடையும்  இதுவரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் 2024 உள்ளூர் அதிகார சபைகள்  தேர்தலுக்காக  தேருநர் இடாப்பில் தாம் பதிவு  செய்துக்கொண்ட  முகவரிக்குரிய தபால் நிலையத்துக்குச் சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர்  உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை கைவசம் வைத்திருப்பது வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்காளரை அடையாளம் காண்பதற்கு வசதியானதாக அமையுமென்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.