தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம்! -கிழக்கு ஆளுநர்

திருகோணமலையில் நேற்று மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிராக  எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை திருகோணமலையில் நேற்று வியாழக்கிழமை(14) ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தனர்.

இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பாக மீனவ சங்கத்தினருடனும், கடற்படையினர், கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள்,அதிரடி படையினர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்த கூடாது எனவும், சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபடுபவருக்கு  எதிராக மீன்பிடி திணைக்களம்,கரையோர பாதுகாப்பு படையினர், பொலிஸ் அதிகாரிகள்,அதிரடி படையினர் ஆகியோரை  சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீனவர் அமைப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆளுநர் கருத்து வெளியிட்டார்.

Senthi thonda தடைவிதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்த வேண்டாம்! -கிழக்கு ஆளுநர்