டித்வா புயல் : கிழக்கில் 33,640 விவசாயிகள் பாதிப்பு – மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.றினூஸ்

டித்வா புயல் சூராவெளி மற்றும் வெள்ளப் பெருக்கு  காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்கான அழிவுகள் மற்றும் அதற்கான நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டமை தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர்  எம்.எஸ்.றினூஸ் அவர்கள் பாதிப்பு தொடர்பில் நேற்று வியாழக்கிழமை (25) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இது குறித்து மேலும்  தெரிவிக்கையில் “கிழக்கு மாகாணத்தில்  மொத்தமாக 21,272 ஹெக்டேயர் நிலப்பரப்புக்களை சேர்ந்த 33,640 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட அடிப்படையில் பார்க்கின்ற போது திருகோணமலை மாவட்டத்தில் 15,389 ஹெக்டேயர் பரப்பளவை கொண்ட 23516 விவசாயிகளும், மட்டக்களப்பில் 2961 ஹெக்டேயரை சேர்ந்த 5009 விவசாயிகளும் ,அம்பாறையில் 2922 ஹெக்டேயரை சேர்ந்த 5115 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது வரையில் சுமார் 3190 மில்லியான் ரூபா நஷ்ட ஈட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.