ஜேவிபி பிழையாக நடக்கிறது என விமர்சிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி, அந்த ஜேவிபியின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை வரவேற்பதாக, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – களுவன்கேணி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதாக கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு தொடர்பான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை பாராளுமன்றில் நிறைவேற்ற உள்ளதாக கூறுகிறது.
இதன் உள்ளடக்கங்கள் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் உள்ளடங்களை காட்டிலும் மிகவும் மோசமானதொன்றென அதனை ஆராய்ந்தபோது தெரியவந்துள்ளது. எனவே, தமிழ் தேசியத்தை பாதுகாப்பதாக கூறும் சுமந்திரனின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி இத்தகையதொரு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.