எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 14 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
இதன்படி, ஜனாதிபதியினால் முன்னர் குறிப்பிட்டபடி, அந்தக் காலப்பகுதியில் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 25 எம்.பி.க்கள் தமக்கு ஆதரவாக அழைப்பு விடுக்கப்படவேண்டும்.
பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் 29ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு உரிய எண்ணிக்கையான எம்.பி.க்கள் அழைக்கப்படாவிடின் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சிக்கு ஆதரவளிக்க முடியாது எனவும் பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.