ஜனாதிபதியின் கடமையை சவாலுக்கு உட்படுத்தும் சுமந்திரன்

தேசிய மக்கள் சக்தி ஆட்சி செய்யும் சபைகளுக்கு மட்டுமே நிதி வளங்கள் இலகுவாக ஒதுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீண்டும் கூறுவது பொய் என்பதற்கு அப்பால்அது தேர்தல் இலஞ்சம் ஆகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை வடக்குக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, கிட்டு பூங்காவில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆற்றிய உரை குறித்து எம்.ஏ. சுமந்திரன் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியட்ட கருத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 33 (இ) சரத்தின் படி, சுதந்திரமானதும் நீதியுமான தேர்தலை நடத்துவதற்கான சூழலை உருவாக்குவது, ஜனாதிபதியின் கடமைகளில் ஒன்று எனக் கூறுகிறது.
வேலியே பயிரை மேயும் இவ் விதி மீறலுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமா? என்றும் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.