ஜனாதிபதித் தோ்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக் குழுவுக்கு தற்போது கிடைக்கப்பெற்றுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழு உடனடியாக தேர்தலை நடாத்தி மக்களின் ஐனநாயக்க உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினாா்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏற்கனவே தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தலை அறிவித்து அதனை நிறுத்தியது. இவ்வாறு காலத்தை இழுத்தடிக்காமல் மக்களின் ஐனநாயக உரிமைக்கு சந்தர்ப்பம் வழங்காது தேர்தலை இழுத்தடிக்காது உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடும் உடனடியாக தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதே” எனன்றும் சிறீதரன் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து கட்சியின் வழக்கு தொடர்பாகவும் கருத்து தெரிவித்தார். நாளைய தினம் வழக்கு விசாரணைக்கு வரும் போது அதனை சுமூகமான முறையில் முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பில் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவா் விளக்கினாா்.