ஜனாதிபதித் தேர்தல்: தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவு குறித்து மனோ தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்க மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இந்த அறிவிப்பை மனோ கணேசன் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ஐக்கிய மக்கள் சக்தியுடன் எமது கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும். நாங்கள் சூரியனையும் சந்திரனையும் கேட்கவில்லை. பெருந்தோட்ட சமூகம் மற்றும் பிற இடங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் இலங்கையர்களாக கருதப்பட வேண்டும் என்று தான் நாங்கள் விரும்புகிறோம்” என மனோ கணேசன் மேலும் கூறினார்.