செய்தியில் மீள்கட்டுமானம் வேண்டாம், செய்கையில் மீள்கட்டுமானம் தேவை! : பா. அரியநேத்திரன்

இலங்கையில் 2004 டிசம்பர் 26 ல் வடகிழக்கு கரையோரப்பகுதிகளை தாக்கிய ஆழிப் பேரலை அனர்த்தத்துக்குப் பின்னர் கடந்த 2025 நவம்பர் 27 தொடக்கம் 30 வரை இலங்கையில் ஏற்பட்ட  டிற்வா சூறாவளியாலும், மழை வெள் ளத்தாலும், மண்சரிவுகளாலும் கடுமையாக மிகப்பாரிய பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களை தேசிய அனர்த்த பகுதிகளாக அறிவித்து சிறப்பு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புப் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி II இன் பிரிவு 9 இன் கீழ் செய்யப்பட்ட பிரகடனத்தின்படி நாடு முழுவதும் பல நாட்களாக பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் பாதகமான வானிலையால் ஏற்பட்ட விரிவான சேதத்தைத் தொடர்ந்து இந்த வர்த்தமானி வெளி யிடப்பட்டுள்ளது.
தேசிய அனர்த்த வலயங்களாக அறிவிக் கப்பட்டுள்ள மாவட்டங்களாக கண்டி நுவரெலியா பதுளை குருநாகல் மாத்தளை கேகாலை கம்பகா முல்லைத்தீவு அனுராதபுரம் கொழும்பு யாழ்ப்பாணம் பொலனறுவை மன்னார் புத்தளம் இரத்தினபுரி மொனராகலை மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை கிளிநொச்சி வவுனியா களுத்துறை என்பன பட்டியல் இடப்பட்டன.
இந்த அனர்த்தங்கள் நடந்து தற்போது இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் மீள் கட்டுமானங்களை பொறுத்தவரை பலவகையான சுற்றுநிருபங்களும், நிவாரணங்களைக்கான விண்ணப்ப படிவங்களும், வெளிநாடுகளின் மனி தாபிமான உதவிகளும், உள்ளூரில் உள்ள பவ கையான அமைப்புகள் பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல் லும் காட்சிகளும், ஜனாதிபதி அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என மற்றும் எதிர்கட்சிகள் என பலர் பாதிக்கப்பட்ட இடங்க ளுக்கு செல்லும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் தினமும் காட்சிகளாக வெளிவந்துகொண்டே உள்ளன.
ஆனால் மீள் கட்டுமானங்கள் என்பது உடனே முழுமையாக சாத்தியப்படக்கூடிய ஒன்றல்ல இன்னும் பல காலங்கள் செல்லும் என்பது உண்மை. பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்தொகைகள் பற்றி ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட கொடுப்பனவு விபரங்களை பார்க்கும்போது ஆச்சரியமாகவும், அவ்வாறான தொகைகளை அனைவருக்கும் சென்றடையக் கூடியவகையில் ஏற்கனவே ஜனாதிபதி நிதி யத்தில் உள்ள பணமும், அமைச்சுக்களில் ஒதுக்கிய பணமும் ஈடுசெய்யமுடியுமா என்ற வினா உள்ளது.
வெளிநாடுகள் பலவகையான நிதி உதவிகள் வழங்குவதாக கூறினாலும் எதிர்பார்த்த தொகைகள் இல்லை மட்டுப்படுத்தப்பட்ட நிதிகளையே இதுவரை வழங்கப்பட்டதை அறிய முடிகிறது. உடைந்த சில பாலங்களை தற்காலிகமாக திருத்துவதற்காக இந்தியா நேரடியாக தள பாடங்களுடன் வருகை தந்து திருத்துவதை காணலாம் இதுபோல் வேறு நாடுகளும் சில இடங்களை பாரம் எடுத்து முக்கியமாக போக்குவரத்து வீதிகளை திருத்தும் சேவைகளில் முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது.
இலங்கைக்கு இதுவரை பல நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து பல்வேறு உதவிகள் கிடைத்துள்ளன குறிப்பாக, பொருளாதார நெருக்கடி மற்றும் சமீபத்திய ‘டிற்வா’ புயல் போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது இந்தியா, சீனா, ஜப்பான், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் பல ஐரோப்பிய, ஆசிய நாடுகள் மனிதாபிமான உதவிகள், நிதி உதவிகள், கடன்கள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கான உதவிகளை வழங்கியுள்ளன, இதில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
முக்கிய உதவிகள்:
1. இந்தியா: இலங்கைக்கு மிகப்பெரிய நிதி உதவியாளராக உள்ளது, குறிப்பாக பொருளாதார நெருக்கடி காலத்தில் கடன்கள், நாணய பரி மாற்றங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது.
2. சர்வதேச நாணய நிதியம் (IMF): பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான நிதி உதவிகளை வழங்கு கிறது, இது கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி உதவிக்கு வழி வகுக்கிறது.
3. உலக வங்கி (World Bank): அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங் களுக்கான உதவிகளை வழங்குகிறது, ஆனால் சில சமயங்களில் கொள்கை மாற்றங்களை எதிர் பார்க்கிறது.
4. சீனா: உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கடன்களை வழங்கியுள்ளது.
5. ஜப்பான்: அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளில் பங்களிக்கிறது.
6. மனிதாபிமான உதவிகள்: சமீபத்திய டிற்வா புயல் போன்ற பேரிடர்களுக்குப் பிறகு, சுமார் 70 நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்க உறுதியளித்துள்ளன. இதில் தமிழ்நாடு அரசின் உதவிகளும் அடங்கும்.
பிற முக்கிய பங்களிப்புகளாக  வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் “இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்” போன்ற நிதிகளுக்கு 19,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாழ் இலங் கையர்கள் பங்களித்துள்ளனர் என கூறப்படுகிறது.
நேரடி முதலீடுகள்பல வெளிநாட்டு முத லீடுகள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன, மேலும் முதலீட்டு வாரியம் இதை ஊக்குவிக்கிறது.  சுருக்கமாக, இலங்கைக்குக் கிடைக்கும் உதவிகள், அதன் பொருளாதார நிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களைப் பொறுத்து, நாடுகளின் அரசாங்கங்கள், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் சமூகம் ஆகியவற்றிலிருந்து வருகின்றன.
தென்னிலங்கை மலையகத்தை தவிர சீரற்ற காலநிலை, கனமழை மற்றும் புயல் காரணமாக இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் (வடமராட்சி கிழக்கு) மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் உட்பட பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன; குறிப்பாக, நாகர்கோவில், ஆழியவளை, நெற்காணி நிலங்கள், மீனவர்கள், மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் மண்சரிவு அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட முக்கிய இடங்கள் மற்றும் பாதிப்புகள் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கிழக்கு மற்றும் ஆழியவளை பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணம் (பொதுவாக) மட்டக் களப்பு மற்றும் திருகோணமலை கனமழை, வெள்ளம், காரணமாக மாவிலாறு அணைக் கட்டு உடைவால் மூதூர் பிரதேச செயலக பிரிவும் மண்சரிவு பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக் கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப் பட்டுவருகிறது. ஆனால் விவசாயம் நெற் செய்கை விவசாய நிலங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளன.
மீன்பிடித் துறை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது தொழிலாளர் கள் தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் என்பன எந்தவகையில் ஈடு செய்யமுடியும் என்பதும் சிந்திக்கவேண்டும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது, மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.  தற்போதைய நிலை (டிசம்பர் 2025)  சீரற்ற காலநிலை ஓரளவு குறைந்து வந்தாலும், வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை தொடர்வதால் அபாயங்கள் நீடிக்கவாய்ப்புள்ளதால் மீள்கட்டுமானப்பணிகள் என்பது சீரமைக்க காலங்கள் செல்லும் வாய்ப் புள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசின் ஜனாதிபதி அநுர மற்றும் அமைச்சர்கள் மீள் கட்டுமானம் பற்றிபலர்  கூறுவதைப்பாதிப்புகளை எதிர்கொள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன, எனினும் சில பகுதிகளில் பாதிப்புகள் தொடர்கின்றன. அநுர அரசானது செய்தியில் மீள்கட்ட மைப்பை செய்வதைவிட்டு செய்கையில் காட்ட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை.