செம்மணி மனித புதை குழியில் மேலும் இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைக்குழியில் இன்றைய தினம் (25) இரண்டு சிறார்களின் என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்றைய தினம் 5 என்புக்கூடுகள் புதைக்குழியிலிருந்து அகழ்தெடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ் நிரஞ்சன் தெரிவித்தார்.

இனப்படுகொலையின் சாட்சியமாக கூறப்பட்டு, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ள செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைக்குழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 20 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

அதற்கமைய, இதுவரையில் 90 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் 81 என்புக்கூடுகள் அகழ்தெடுக்கப்பட்டுள்ளன.இதேவேளை இன்றைய அகழ்வு பணிகளின் போது சித்துப்பாத்தி பகுதியில் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக காணியை துப்புரவு செய்யும் பணியும் இடம்பெற்றது.