யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழிகளில் இருந்து இன்று மேலும் 4 மனித என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளன.
சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது அமர்வின் 14ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்று (03) முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, முன்னதாக வெளிப்பட்ட 3 என்புக்கூட்டுத் தொகுதிகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, இதுவரை மொத்தமாக 130 என்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், செம்மணி, சித்துப்பாத்தி பகுதியில் தற்போதுள்ள 2 மனித புதைகுழிகளை விட அருகில் மேலும் மனித புதைகுழிகள் உள்ளனவா? என்பதனை ஆராயும் நோக்கில், இன்று தினம் (04) ஸ்கேன் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, நாளை (05) மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை அடையாளம் காணும் வகையில் அவற்றை மக்களுக்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.