யாழ்ப்பாணம் – செம்மணி புதைகுழியில் இருந்து சிறுவர் ஒருவரின் எலும்பு கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்புகள் மற்றும் மேலும் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் வியாழக்கிழமை (03) அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஏழாம் நாள் நடவடிக்கைகள் புதன்கிழமை (02) நடைபெற்றது.
அன்றைய பணிகளில், நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டன. மேலும் சுமார் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் குழப்பமான முறையில் காணப்பட்டதால், அவற்றை அகழ்ந்து எடுக்க பணியாளர்கள் சவால்களை சந்தித்துள்ளனர்.
மேலும், நேற்றைய அகழ்வு பணிகளில் மேலும் நான்கு எலும்பு கூட்டு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை சிறுவர்களுடைய எலும்பு கூட்டு தொகுதிகள் உட்பட மொத்தமாக 38 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றிலும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்களின் பங்கேற்புடன் சந்தேகத்திற்குரிய பிரதேசங்களில் அகழ்வு பணிகள் புதன்கிழமை ( 02) ஆரம்பிக்கப்பட்டது. அதே நேரத்தில், சந்தேகமான பகுதிகளில் அகழ்வு பணிகளுக்கு முன்னதாக துப்பரவு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.