இலங்கையின் 78வது சுதந்திர தினம் இலங்கை தீவில் சிங்கள பெரும்பான்மையினத்தினால் கோலாகலமாக கொண்டாடப்பட்ட அதேநேரத்தில் வடகிழக்கு தமிழர் தாய கத்தில் தேசிய கரிநாள் பிரகடனம் செய்யப்பட்டு இலங்கை யின் சுதந்திர தினத்தினை தமிழர்கள் துக்க தினமாகவும் உரிமை மறுப்பு தினமாகவும் அனுஸ்டித்தனர்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு தமிழர்களுக்கெதிரான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. குடியுரிமைச்சட்டம், வாக்குரிமைச்சட்டம் என்பன கொண்டு வந்து மலையக மக்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்ற மக்களாக மாற்றியது மட்டுமன்றி தமிழர்களின் மேலாண்மையினை முடக்கும் வகையில் தொடர்ச்சியாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.
காலம்காலமாக ஆட்சிப்பீடமேறிய சிங்கள ஆட்சியாளர்கள் இந்த நாட்டினை முன்னேற்றுவது குறித்து எந்த காலத்திலும் சிந்திக்காது இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களை எவ்வாறு அடக்கி ஒடுக்கலாம்,எவ்வாறு தமது சிங்கள மேலாதிக்கத்தினை நிலைநாட்டலாம் என்று சிந்தித்து செயற்பட்டவர்களாகவே இருந்துவருகின்றனர்.இதில் இலங்கையில் எந்த ஆட்சியாளர்களும் விதிவிலக் கற்றவர்களாகவே இருந்துவருகின்றனர்.
இதன்காரணமாகவே இந்த நாட்டில் அனைத்து வளங்களையும் கொண்ட தமிழ் சமூகம் தமது இருப்பினை பாதுகாப்பதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை முன் னெடுத்துவருகின்றனர்.அகிம்சை போராட்டம் தொடக்கம் ஆயுதப்போராட்டம்,இராஜதந்திரபோரா ட்டம் என பல்வேறு வகையான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையிலேயே ஆயுதப்போராட்டம் மௌ னிக்கப்பட்டதன் பின்னர் பல்வேறு போராட்டங்களை தமிழர் சமூகம் முன்னெடுத்துவருகின்றது. இதன் தொடர்ச்சி யாகவே இலங்கையின் சுதந்திர தினத்தினை அது சிங்கள மக்களுக்கான சுதந்திரம் மட்டுமேயன்றி அது தமிழர்களுக்கான கரிநாள் என்பதை பிரகடனப்படுத்தி போராட்டங்கள் வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவருகின் றன.
இந்த போராட்டங்களை வெறுமனே ஒரு போராட்டமாக கடந்துசெல்ல முடியாது. ஏனெனில் இந்த போராட்டம் மீது இலங்கை அரசாங்கமே அச்சம் கொள்ளும் நிலைமை காணப்படுகின்றது என்பது அந்த போராட்ட நேரத்தில் இடம்பெற்ற சம்பவங்களே சாட்சியங்களாகவுள் ளன.
இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது இந்த நாட்டினை மீட்கவந்த மீட்பர்களாகவும் தமிழ் மக்களை பாதுகாக்கவந்த பாதுகாவலர்களாகவும் இலங்கைக்குள் மட்டுமன்றி சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கான செயற் பாடுகளை அண்மைக்காலமாக முன்னெடுத்து வருவதை காணமுடிகின்றது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தினையும் கிழக்கு மாகாணத்தினையும் வேறுபடுத்தியவகையிலும் வடக்கு மாகாணத்தின் மக்களை மட்டும் பேசுபொருளாகவும் தமக்கு சார்பானவர்களாகவும் காட்டி தமிழ் மக்கள் உரிமைசார்ந்த விடயங்களை விடுத்து தமிழ் மக்கள் தமது ஆட்சியதிகாரத்தினை ஏற்று வாழும் நிலையில் உள்ளார்கள் என்பதை காட்டுவதற்கான பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையிலேயே இந்த கரிநாள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த போராட்டங்களை தடுப்பதற்கு பல்வேறு பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டன.குறிப்பாக கிழக்கில் நடைபெற்ற போராட்டத்தினை தடுப்பதற்கு இலங்கையின் பாதுகாப்பு துறை மிக மோசமான செயற்பாடுகளை முன் னெடுத்தது.
மட்டக்களப்பில் நடைபெற்ற கிழக்கு மாகா ணத்திற்கான போராட்டத்திற்கு திருகோணமலை மாவட் டத்திலிருந்தும் அம்பாறை மாவட்டத்திலிருந்தும் வந்த மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும் நிலைமை ஏற்பட்டது.மகிந்த ,கோத்தபாய ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதையும் விட மிக மோசமான செயற்பாடுகள் இந்த ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டன.அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியிலிருந்து வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளை ஏற்றிவந்த இரு பஸ்கள் அக்கரைப்பற்று இராணுவ முகாமுக்கு அருகில் நிறுத்தப்பட்டு அதற்கு ஏறிய இலங்கை இராணுவ புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்களினால் இரண்டு பஸ் களிலும் சிறிய கஞ்சா பொதிகளை வைத்துவிட்டு பஸ்ஸில் கஞ்சா கடத்துவதாக கூறி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.
அங்கு விசாரணையின்போது இராணுவ புலனாய் வுத்துறை அதிகாரிகள்தான் தமது வாகனங்களுக்குள் கஞ்சாவினை எடுத்ததாக அதில்வந்த வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களி ன் உறவினர்கள் அனைவரும் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்துகொண்டி ருக்கும்போது அக்கரைப்பற்று மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் போதையுடன் பஸ்களை இளைஞர்கள் குழுவொன்று கைகளில் தேசியக்கொடிகளுடன் வழி மறித்து அவர்களுடன் முரண்பட்ட நிலையும் ஏற் பட்டது.அங்குவந்தவர்கள் வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தமிழ் சிங்கள இளைஞர்கள் என அப்பகுதி தகவல்கள் தெரிவித்தன.
அவ்வாறானால் கிழக்கில் நடைபெற்ற போராட்டத்தினை தடுப்பதற்கு பல்வேறு இடையூறுகள் முன்னெடுக்கப்பட்டன.திருகோணமலை யில் இருந்து வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் வந்த பஸ்கள் மறிக்கப்பட்டு புலனாய்வுத்துறையினரால் தகவல்கள் பெறப்பட்டுள்ளது.இதேபோன்று மட்டக்களப்பில் போராட் டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பொலிஸார் போராட்டத் தினை நடாத்துவதற்கான தடைகளை ஏற்படுத்தும் செயற் பாடுகளை முன்னெடுத்தனர்.
“அனுரவின் காலத்தில் நமது தமிழ் மக்கள் சுதந்திரமாக இருக்கின்றோம் என கூறிக் கொண்டிருக்கிறார்கள்.; ஆனால் கரிநாள் போராட்டத்தின் போது அனுர அரசு இரகசியமான முறையில் எல்லோரையும் அனுப்பி எங்களை அழிக்க தூண்டுகின்றது” என அம்பாறை மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங் கத்தின் தலைவி தம்பிராஜா செல்வராணி தெரிவித்தார்.
“கஞ்சாவை கொண்டு எங்களது போராட்டத்தை குழப்புவதற்கு வழி செய்ய வேண்டாம் என்று கூறினோம். அந்த இடத்தில் எங்களது தாய்மார்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்த னர். ஒரு மணி நேரம் அவ்விடத்தில் எங்களை வைத்து என்னையும் சாரதியையும் அழைத்து போலீஸ் நிலையத் திற்கு கொண்டு சென்று விசாரணையை செய்தனர்.
விசாரணையின் போது கூறினார்கள் அதற்குள் இருந்த கஞ்சாவை ஆமீ புலனாய்வு பிரிவினர்தான் வைத்தார்கள் என்று கூறினார்கள். அதன் பின்னர் எங்களை விட்டார்கள். இந்த முறை தான் நமக்கு எவருக்குமே நீதிமன்ற தடை உத்தரவு வரவில்லை ஆனால் மாற்று வழியாக இவ்வாறான செயற்பாடுகளை இந்த அனுர அரசு செய்கின்றது. உண்மையில் அவரது காலத்தில் நமது தமிழ் மக்கள் நாங்கள் சுதந்திரமாக இருக்கின்றோம் என கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கரிநாள் போராட்டத்தின்போது நடைபெற்ற நிகழ்வு அனுர அரசு ரகசியமான முறையில் எல்லோரையும் அனுப்பி எங்களை அழிக்க தூண்டுகின்றது எங்களுக்கு தோன்றுகின்றது. உண்மையில் இந்த சுதந்திர தினத்தை 78 ஆண்டுகளாக தமிழர்களாகிய நாங்கள் இந்த சுதந்திர தினத்தை இவ்வாறு தான் செய்து வருகின்றோம். ஏனென்றால் உண்மையில் நமக்கு சுதந்திரம் இல்லை. எங்களது கணவர்களை பிள்ளைகளை தொலைத்து விட்டு எங்களது தாய்மார்கள் 350 பேரை நாங்கள் இழந்து நிற்கின்றோம்.
அடுத்த வருடம் நாங்களும் இறப்போமோ இருப்போமோ தெரியாது.தமிழர்களுக்கான நீதி எப்போது கிடைக்கின்றதோ அப்போது தான் நமக்கு நிரந்தரமான சுதந்திரம் என தெரிவித்தார்.
இவ்வாறான உணர்வுகள் என்பது இன்று தமிழ் மக்களிடம் மேல் எழும் நிலைமை காணப்படுகின்றது.காரணம் கடந்த ஒன்றரை வருடமாக என்பிபி மோகத்திற் குள் மூழ்கிய சமூகம் இன்று விழிக்கும் நிலைமை ஏற்பட்டு வருகின்றது.
வடகிழக்கில் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட செயற்பாடுகளை யாரும் இலகுவில் கடந்துவிட முடியாது.கடந்த ஆட்சியாளர்கள் முன்னெடுத்துவந்த ஆக்கிர மிப்பு செயற்பாடுகளை இன்றைய ஆட்சியாளர்களும் முன்னெடுத்துச்செல்லும் நிலைமையே காணப்படுகின்றது.அதற்காகவே தமிழர்களின் குரல்களை அடக்குவதற்கான செயற்பாடுகள் வடகிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றன.
“எங்களது உரிமை இன்று மறுக்கப்பட்டு இருக் கிறது.கடந்த காலங்களில் கோத்தபாய அரசாங்கம் இருக் கின்ற போதும் கூட இந்த சுதந்திர தினத்தை கரிநாளாக செய்து வருகின்றோம். ஆனால் இன்றைய அரசு மக்களுக் கான தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது என்று சொல்லிக்கொண்டு இன்று வீதியில் நடக்கின்ற நடமாடும் உரிமையைக் கூட இந்த சுதந்திர நாளில் எமக்கு மறுக்கப் பட்டிருக்கின்றது” என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.
“நமது நிலங்களை அபகரிக்கின்றார்கள், புத்தரை வைத்து இடங்களை அபகரிக்கின்றார்கள். இதனைப் பார்த்தால் நமக்கு வேதனையாக இருக்கின்றது. அதாவது மத சின்னத்தை வைத்துக்கொண்டு தமிழர்களுடைய இடங்களில் அவர்களது இன பரம்பலை செய்து கொண்டி ருக்கின்றார்கள். எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை கேட்க வேண்டும். எங்களது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசாங்கம் கூற வேண்டும். அதனை சொல்வதற்கு தயார் இல்லை இந்த வீதி யாருக்கு சொந்தம் இந்த மண் யாருக்கு சொந்தம் தமிழர்கள் வாழுகின்ற இடத்தில் வந்து தமிழர்களை அடக்குகின்றார்கள் என்றால் இதுதானா சுதந்திர தினம் என தெரிவித்தார்.
இவ்வாறான நிலைமைகள் என்பது வடகிழக்கில் மீண்டும் ஒரு அடக்குமுறைக்கு இந்த அரசாங்கம் தயாராகி வருவதை வெளிப்படுத்துகின்றது.அண்மைக்கா ல செயற் பாடுகள் இந்த அரசாங்கத்தின் முகத்திரைகளை கிழிக் கும் வகையில் இருப்பதை இன்று உணரமுடிகின்றது.எதிர் காலத்தில் எமது ஒன்றுபட்ட அரசியல் பலமும்,சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றுபட்ட செயற்பாடுகளுமே எமது நிலத்தினையும் எமது உரிமையினையும் தக்கவைப்பதற் கான அடித்தளங்களை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணர்ந்துசெயற்படவேண்டும்.



