
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையால் வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாகா ணங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்க ளின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாடம் தினக் கூலித் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெற் செய்கை விவசாய நிலங்கள் கிழக்கு மாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள “திட்வா” புயல் மற்றும் கனமழை,மண்சரிவு,வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1984ம் ஆண்டின் பின் ஏற்பட்ட பாரிய பேரிடராக இது காணப்படுகிறது.
கிழக்கு மாகாண திருகோணமலை, மட்டக் களப்பு,அம்பாறை போன்ற மாவட்டங்களில் விவசாயம்,மீன் பிடி,கால் நடை வளர்ப்பு துறை களை அதிகமாக தொழில்களாக கொண்டவர்களே காணப்படுகிறார்கள்.
இவ்வாறான நிலையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 56 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாக வும் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி முதல் இன்று (2811.2025) வரை 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றில் 26 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
அதிகமாக, பதுளை மாவட்டத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் நால்வரும் ,அம்பாறை மாவட்டத்தில் ஏழு பேரும் ,கேகாலை மாவட்டத்தில் ஏழு பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்களினால் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 12513 குடும்பங்களைச் சேர்ந்த 43991 நபர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். அனர்த்தங்களினால் 4 வீடுகள் முழுமை யாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதம டைந்துள்ளன.அனர்த்தங்களினால் பாதிக்கப் பட்டவர்களில் 922 குடும்பங்களைச் சேர்ந்த 2443 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
மேலும் 137 குடும்பங்களைச் சேர்ந்த 477 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக வும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித் துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் இன்று (28.11.2025) 12.00 pm தகவலின் படி 11 பிரதேச செயலகப் பிரிவின் 124 கிராம சேவகர் பிரிவு கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 5495 குடும்பங்களை சேர்ந்த 16222 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 09 இடைத் தங்கல் முகாம்களில் 270 குடும்பங்களை சேர்ந்த 755 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள் ளது.
கிழக்கு மாகாண முஸ்லீம் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளதோடு உயர்தரப் பரீட்சை நடை பெற்று வரும் நிலையில் 27-29 வரையில் இடம் பெறவுள்ள பரீட்சை திகதிகள் ஒத்தி வைக்கப்பட்டு டிசம்பர் 07,08,09 ம் திகதிகளில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது டன் வயல் நிலங்களும் வெள்ள நீரினால் மூழ்கடிக்கப்பட்டு ஒரு சில இடங்களில் தரைவழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகளை வழங்கவும் நிவாரணங்கள் வழங்குவது தொடர்பிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரியவர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் இரு நாட்க ளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் பாராளு மன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவசர கால நிலையை பிரகடனப்படுத்துமாறும் கோரியுள்ளார். இது போன்று எதிர்க் கட்சி தலைவர் சஜீத் பிரேமதாசவும் இதனை கூறியுள்ள போதிலும் நாட்டை பாரம் எடுக்காவிட்டால் எங்களிடம் ஒப்படையுங்கள் எனவும் மேலும் அதுர குமார அரசாங்கத்திடம் கோரிக்கைகளாக முன்வைத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதியில் கார் ஒன்று வெள்ள நீரில் மூழ்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
குறித்த அனர்த்தம் மேலும் இரு நாட்க ளுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்கள்,உறவினர் வீடுக ளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ் அனர்த்தத் தின் போது ஏதாவது உதவிகள் தேவைப்படுமாயின் 24 மணி நேர அவசர தொலை பேசி இலக்கமான 117 க்கு அழைப்புக்களை மேற்கொள்ள முடியும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இவ்வாறான அனர்த்தம் காலா காலம் கடந்து பல உயிர் உடைமைகளை காவு கொள்கின்ற போதும் திட்டமிட்ட முற்காப்பு நடவடிக்கைகள் இன்மையே குறைபாடாக காணப்படுகிறது. அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க போதுமான முன் ஆயத்தங்களை உரிய அரச தரப்புக்கள் முன்னெடுக்க வேண்டும். வெள்ளம் வந்ததன் பின் அனை கட்டுவதை விடுத்து முற்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிப்பதே சிறந்த வழியாகும்.
குறித்த இடரினால் பாதிக்கப்பட்டவர்களுக் காக குறிப்பாக மீனவ ,விவசாய குடும்பங்களை இனங்கண்டு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பாதிக்கப்பட்ட வளங்களுக்கான இழப்பீடுகளை யும் நியாயமான முறையில் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட சமூகத்தின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
இத் திடீர் பேரிடரால் மேலும் இலங்கை விமானப் படையினரின் பெல்_212 ஹெலிகெப்டர் மூலமாக மாகோ பகுதியில் இரு மாடி கட்டடத்தில் உள்ள மூவரை காப்பாற்றியுள்ளனர்.
இந்த நிலை வராமல் அனர்த்த நிலமைகளின் போது தங்களை பாதுகாக்க கூடிய விழிப் புணர்வுகளை உரிய பகுதி மக்களுக்கு திறம்பட பயிற்சி களை வழங்குவதன் மூலமாக தங்களை தாங்களே காப்பாற்ற முடியும்.
எது எவ்வாறாக இருப்பினும் பேரிடரில் இருந்து மக்களை பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவ அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.



