சிறீலங்கா அரசு விலகினாலும் தீர்மானம் நடைமுறையில் இருக்கும் – பிரான்ஸ்

ஜக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா விலகினாலும், தீர்மானம் நடைமுறையில் இருக்கும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இனநல்லிணக்கப்பாடு, நீதி விசாரணை போன்ற சட்டவிதிகளில் இருந்து வெளி-யேற முடியாது என சிறீலங்காவுக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸின் ஆசியாவுக்கான வெளிவிவகார பணிப்பாளர் தெயிரி மத்தியூ நேற்று (27) தெரிவித்துள்ளார்.

இந்த முடிவு புதிய அரசு எடுத்துள்ள அரசியல் ரீதியான முடிவு. ஆனால் அமைதியும், இனஒற்றுமையுமே பிரதானமானது என்பதே எமது நாட்டின் கருத்தாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.