சின்னக்குள புனரமைப்பு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினால் தடைப்பட்டது

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் அமைந்துள்ள சின்னக்குளத்தின் புனரமைப்பு வேலைகளுக்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தடையாக உள்ளதாக முல்லைத்தீவு கமநலசேவைத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் அறிவித்துள்ளார்

இந்த வருட முதலாவது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடந்த 18ஆம் திகதி நடைபெற்றது. குறித்த சின்னக்குள மறுசிரமைப்புத் தொடர்பாக து.ரவிகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த கமநலசேவை உத்தியோகத்தர், இந்த வருடம் சின்னக்குளத்தின் புனரமைப்பிற்கு 13.2 மில்லியன் ரூபா தேவை எனத் தீர்மானிக்கப்பட்டதற்கமைய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் சின்னக்குளம் தமது கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்து அபிவிருத்தி வேலைகளுக்கு இடையுறு விளைவிக்கின்றனர். இதனால் இக்குளத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதி வேறு குளத்தின் சீரமைப்பிற்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவித்தார்.