சர்வதேச பொறிமுறையின் ஊடாகவே நீதியை பெற முடியும் என்று தமிழ் மக்கள் நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
செம்மணி ‘அணையா தீபம்’ போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற போராட்டத்தை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு பொறிமுறை என்பது 30 வருடங்களாக உருக்குலைந்த நிலையில் உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியாக குரலை உயர்த்தி பேச வேண்டிய நிலையில் தமிழ் மக்கள் உள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக், இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
30 வருடகால யுத்தத்தில் செம்மணி மனித புதைகுழி போன்று வடக்கு கிழக்கில் பல புதைகுழிகள் உள்ளன.
எனவே, இந்த விடயத்தில் வொல்கர் ரெக் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.