சர்வதேசநீதியை தடம்புரளச்செய்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து தமிழ் மக்கள் கலக்கமடைந்துள்ளனர் என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகபதிவில் இதனை தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காக நாங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். சர்வதேச நீதியை தடம்புரளச்செய்வதற்காக இலங்கை அரசாங்கம் உள்நாட்டுபொறிமுறை – கலப்பு பொறிமுறை மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவற்றை பயன்படுத்த முயல்வது குறித்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள்;.இந்த முட்டுக்கட்டை தந்திரோபாயங்களை நிராகரிக்கவேண்டும்,இந்த போலி நாடகத்தை அம்பலப்படுத்தவேண்டும்,சர்வதேச நீதி செயற்பாடுகளை முழுமையாக பொறுப்பேற்கவேண்டும். இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் தொடரும் வன்முறைகள் குறித்தும் 1948 முதல் இடம்பெறும் இனப்படுகொலைகள் குறித்தும் அறிக்கையிடுதல் வேண்டும்.