சர்வதேச தேயிலை நாளை முன்னிட்டு இன்று (21) நுவரெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் மறுக்கப்பட்ட பல்வேறு உரிமைசார் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் பெருந்தோட்ட மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இதன்போது வலியுறுத்தியிருந்தனர்.
அதேநேரம், சர்வதேச தேயிலை நாளை முன்னிட்டு சில தனியார் அமைப்புகளின் ஏற்பாட்டில் சில நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.



