கோவிட்-19 – கொங்கொங் கற்றுத் தந்த பாடம்

கொரோனா நோயை கட்டுப்படுத்துவதில் கொங்கெங் இன் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் சிறீலங்காவில் முன்வைக்கப்பட்டுள்ளது.

கொங்கொங் எவ்வாறு இந்த நோயை கட்டுப்படுத்தியது?

அங்கு முதலாவது கொரோனா நோயின் தாக்க அலை ஜனவரியின் நடுப்பகுதி தொடக்கம் பெப்ரவரி மாதம் முடிவு வரையும் நீடித்திருந்தது. இது சீனாவில் இருந்து வந்தவர்களால் ஏற்பட்டதுடன், உள்ளூர் நடவடிக்கைகளினாலும் பரவியிருந்தது.

அதனை தடுப்பதற்கு பல நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், அதிகமான பி.சி.ஆர் பரிசோதனைகள் மூலம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். வானூர்தி நிலையங்களிலும் வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.  நோய் இல்லை என உறுதிப்படுத்தப்படும் வரை பயணிகள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இரண்டாவது அலை மார்ச் மாதம் மற்றும் ஏப்பிரல் மாதத்தின் முற்பகுதி வரை ஏற்பட்டது. இது சீனாவில் இருந்து வந்தவர்களால் ஏற்படவில்லை. ஐரோப்பாவில் குறிப்பாக பிரித்தானியாவில் இருந்து வந்தவர்களால் ஏற்பட்டது. மீண்டும் இணைந்த நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டன. நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நாட்டுக்குள் வரும் மக்களை பரிசோதனை செய்து கட்டுப்படுத்தியதே முதன்மையானது.