கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு நீதி கோரி போராட்டமொன்று இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனித புதைகுழிக்கு உரிய நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக, இருபதுக்கும் அதிகமான மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜுன் மாதம் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கையில் 56 மனித புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இதுவரை 21 மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.