குமாரபுரம் படுகொலை: 28ஆவது ஆண்டு நினைவுதினம்

IMG 20240212 WA0036 குமாரபுரம் படுகொலை: 28ஆவது ஆண்டு நினைவுதினம்1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று நேற்றுடன் (11) 28 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். உயிரிழந்தவர்களுக்காக ஈகைச் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது 26 (சிறுவர்கள், பெண்கள் உட்பட) பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 20 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் பெரும்பான்மை இன ஜூரிகள் கொண்ட சபையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இத்தனைக்கும் படுகொலைக்கு உள்ளானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை அடையாளம் காட்டியிருந்தனர். எனினும், அவர்களுக்கு நீதிகிடைக்கவில்லை.

IMG 20240212 WA0037 குமாரபுரம் படுகொலை: 28ஆவது ஆண்டு நினைவுதினம் IMG 20240212 WA0038 குமாரபுரம் படுகொலை: 28ஆவது ஆண்டு நினைவுதினம்