கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதற்காக ஹக்கீமும் அதாவுல்லாவும் பொது இணக்கப்பாடு!

மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவை களமிறக்குவதற்கு தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணங்கியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச்சின்னத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கு தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.