கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு…

கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற நிலையில் பெலாரஸ் எல்லையில் அந்நாட்டு இராணுவத்தினரால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உத்தியோகத்தருடன் மற்றுமொரு இலங்கையரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இருவரும் பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்காட்டுப் பகுதியில் விலங்குகள் நுழையும் பகுதிக்குள்ளால் நாடு ஒன்றிற்குள் நுழைய முற்பட்ட வேளையில் அங்கு வந்திருந்த குறித்த நாட்டு இராணுவத்தினர் சிலர் அவர்களை கடும் சித்திரவதைக்குள்ளாக்கிச் சுட்டுக் கொன்றதுடன் உடலை ஆற்றுக்குள் வீசியதாகவும் தெரியவருகின்றது.

2021ம் ஆண்டிலிருந்து இவ்வாறான ஆட்கடத்தல்காரர்கள் மூலம் கொண்டு வரப்பட்ட 78 பேர் அந்த நாட்டு இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரியவருகின்றது.