கிறிஸ்மஸ் தீவில் கொரோனா வைரஸ் தாக்கம் கண்காணிப்பில் சிக்கியிருக்கும் ஈழத் தமிழ் அகதி குடும்பம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கான பகுதியில் ஈழத் தமிழ் அகதி குடும்பம் ஒன்று சிக்கித் தவித்து வருகின்றது.

சீனாவின் வுஹான் நகரிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட அவுஸ்திரேலியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்காணிக்க கிறிஸ்மஸ் தீவில் அவர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர். இதே கிறிஸ்மஸ் தீவில் வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதி குடும்பத்திற்கு இது பற்றிய எந்த ஒரு தகவலும் முன்னர் தெரிவிக்கப்படவில்லை.

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த பிரியா – நடேசலிங்கம் என்னும் ஈழத் தமிழ் அகதி குடும்பத்தின் விசா கடந்த மாதம் 2018இல் காலாவதியானது. இதனையடுத்து இவர்கள் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் இக்குடும்பத்தினர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த நிலையில் நீதிமன்ற தலையீட்டால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் இக்குடும்பத்தினர் கிறிஸ்மஸ் தீவிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் தான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரும் கிறிஸ்மஸ் தீவில் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர். ஆனால் அங்கு ஏற்கனவே உள்ள ஈழத் தமிழ் அகதி குடும்பத்தினருக்கு இது குறித்து தெரிவிக்காதது அவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.