இல்ல மெய்வன்மை போட்டியில் கார்த்திகை பூ, யுத்த டாங்கி வடிவில் இல்லங்கள் அலங்கரிக்கப்பட்டமை தொடர்பில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி இல்ல மெய்வன்மை போட்டி நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டாங்கி வடிவிலும் இல்ல அலங்கரிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த இல்ல அலங்காரங்கள் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு ஆசிரியர்களும் மாணவர்களும் அழைக்கப்பட்டு வாக்கு மூலம் பெற்ற பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.



