காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதிகோரி லண்டனில் போராட்டம்!

Oruvan

புலம்பெயர் நாட்டு உறவுகளினால் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் லண்டன் நாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய நேற்று  குறித்த நீதிகோரிய போராட்டம் நடைபெற்றது.  பல நூற்றுக்கணக்கான புலம்பெயர் லண்டன் வாழ் உறவுகள் லந்து கொண்டதுடன்  காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே ?, இனப்படு கொலையாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரிய வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.