கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே. க. வலியுறுத்து

பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியை துறக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள இவ்வாறு வலியுறுத்தினார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு கைவிடப்பட வேண்டும், கல்வி அமைச்சு பதவியில் இருந்து பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி விமல் வீரவன்சவால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.