கமலா ஹாரிஸுக்காக பிரச்சாரக் களத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக, அமெரிக்க வாழ் இந்தியர்களும், இந்துக்களும் பிரச்சார நடவடிக்கைகளுடன் களம் இறங்கியுள்ளனர். கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ‘கமலா கே சாத்’ (கமலாவின் பக்கம்) என்ற டேக் லைனுடன் DesiPresident.com என்ற பெயரில் இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

“வரவிருக்கும் மாதங்கள், வரலாற்றை உருவாக்க நாம் ஒன்றாக அணிவகுத்து நிற்கும்போது உற்சாகமும் வாக்குறுதிகளும் நிறைந்தவையாக இருக்கும். உங்களின் பங்களிப்பும் உற்சாகமும் எங்களின் வெற்றிக்கு முக்கியம், உங்களுடனான இந்தப் பயணத்துக்காக இனிமேலும் காத்திருக்க முடியாது” என்று அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.