நடந்து முடிந்த கனேடிய பாராளுமன்ற தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட இருவர் வெற்றி பெற்றுள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட கெரி ஆனந்த சங்கரி மற்றும் ஜூனிதா நாதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமையில் இருந்தே முன்னாள் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை வகித்ததுடன் இறுதியில் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் லிபரல் கட்சியின் சார்பில் ஸ்கார்பரோ – கில்ட்வுட்டில் போட்டியிட்ட கெரி ஆனந்த சங்கரி அங்கு முன்னிலை பெற்றுள்ளார். இதன்படி, அவர் அங்கு 34 ஆயிரத்து 941 வாக்குகளை பெற்றுள்ளதாக கனேடிய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் பிக்கெர்லின் புருக்லிவ் தொகுதியில் போட்டியிட்ட ஜூனிதா நாதன் 24 ஆயிரத்து 951 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
இந்தநிலையில் லிபரல் கட்சியின் மார்க் கார்னி மீண்டும் பிரதமராக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.