கனேடிய தேர்தலும் வெற்றி பெற்ற தமிழரும்

கனேடிய 43 நாடாளுமன்றத் தேர்தல் நேற்றைய தினம் நடைபெற்றது.  இந்தத் தேர்தலிலும் தற்போதைய பிரதமர் ட்ரூட்டோ இரண்டாவது முறையாக பிரதமராக வெல்லக்கூடும் என்ற நிலையில், அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடாக விளங்கும் கனடாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை உலகம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இடங்கள் உள்ளது. 170 இடங்களில் வெற்றி பெற்றாலே வெற்றி பெறமுடியும். இதுவரை வெளியான முடிவுகளின்படி ட்ரூடோவின் லிபரல் கட்சி 144 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களை வென்றுள்ளது. ஆனால் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ட்ரூடோ மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

தேர்தல் முடிவுகள் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு சாதகமாக வருவதை அறிந்ததும், மத்திய கனடாவில் அமைந்திருக்கும் ரெஜினாவலுள்ள கன்சவேட்டிவ் கட்சியின் தேர்தல் தலைமையகத்தில் இருந்த உற்சாகம் குறையத் தொடங்கி விட்டது. கன்சவேட்டிவ் கட்சியே அதிக இடங்களை வெல்லும் என்று சில நாட்களுக்கு முன்னர் கணிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் இருந்து ஜஸ்டின் ட்ரூடோவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதல் ஆளாக தனது வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்தார்.

தேர்தல் தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ, தனது ருவிற்றர் பக்கத்தில் “நன்றி கனடா, நாடு சரியான திசையில் தான் பயணம் செய்கின்றது எனவும், எங்கள் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. நீங்கள் யாருக்கு வாக்களித்து இருந்தாலும், எங்கள் கட்சி கனடாவின் அனைத்து மக்களுக்காகவும் உழைக்கும்” என பதிவிட்டுள்ளார்.

gary கனேடிய தேர்தலும் வெற்றி பெற்ற தமிழரும்ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியும், ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சியும் சுமார் 34சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இத்தேர்தலில் தான் கனடாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக பெண்கள் போட்டியிட்டனர்.

கனடா இதுவரை கண்டிராத மிக நெருக்கமான போட்டி ஏற்பட்டுள்ள இத் தேர்தலில், லிபரல் அல்லது கன்சர்வேட்டிவ் கட்சியினர் யார் முன்னேறினாலும் அது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, ஒன்ராறியோ மாகாணத்தில், ஆளும் லிபரல் கட்சியின் சார்பில், ஸ்காபரோ ரூஜ்பாரக் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஹரி ஆனந்தசங்கரிக்கு  இந்தமுறை 62.3 வீத வாக்குகள் கிடைத்துள்ளது.

2015 தேர்தல் வெற்றி பெற்ற அதே தொகுதியில், அதே கட்சியில் மீண்டும் போட்டியிட்டிருந்தார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான வீ.ஆனந்தசங்கரியின் இரண்டாவது மகனாவார். இலங்கையில் பிறந்த இவர் தனது 10 வயதில் 1983இல் தனது தாயாருடன் கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். அங்கு தனது உயர் கல்வியை தொடர்ந்து 2006இல் பட்டம் பெற்று, ரொறொன்டோவில் வழக்கறிஞராக பணியாற்றினார்.

196 தேர்தல் தொகுதிகளில், 44 அறிக்கைகள் வெளியான நிலையில் ஹரி ஆனந்தசங்கரி தெளிவான பெரும்பான்மையுடன் முன்னிலை வகிக்கின்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட கொன்சவேட்டிவ் கட்சியின் பொப்பி சிங் 19 வீத வாக்குகளையே பெற்றுள்ளார். புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு 10 வீதமும், கிறீன் கட்சி வேட்பாளருக்கு 4வீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

கடந்த முறை ஹரி ஆனந்தசங்கரி இதே தொகுதியில் 60 வீத வாக்குகளையும், கொன்சவேட்டிவ் கட்சி வேட்பாளர் 27 வீத வாக்குகளை பெற்றிருந்தனர்.

அதேவேளை, கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்தை இழக்கின்ற போதும், அதிகளவு ஆசனங்களுடன் முன்னிலை வகித்து வருகின்றது.

முன்னதாக, மற்ற நாடுகளைப் போன்று கனடிய மக்களும் அரசியல் சார்ந்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தலில் வாக்களித்தாலும், நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தெளிவான தீர்வை முன்வைக்கும் கட்சிக்காக தங்களது முடிவை மாற்றும் போக்கும் மக்களிடையே காணப்படுகின்றது.