கண்டி மாவட்டத்தில் 1,386 குடும்பங்கள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் அதிகம் உள்ள 20 பிரதேச செயலகங்களில் 1845 குடும்பங்கள் இனங்காணப்பட்டுள்ளன.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை 19 பிரதேச செயலகங்களில் உள்ள 231 குடும்பங்கள் மாத்திரமே மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தணிக்கை அறிக்கையின்படி, 235 குடும்பங்கள் மாற்று குடியிருப்புக்கு விண்ணப்பித்துள்ளன.
கண்டி மாவட்ட செயலகத்தின் 2023 வருடாந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.