கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Unknown 1 2 கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு

இனவழிப்பு வாரத்தை முன்னிட்டு மே 12 முதல் 18 வரையும் வடகிழக்கு முழுவதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளும் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது அங்கு வாழ்ந்த மக்களின் உயிர் காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

அந்த வகையில் கடந்த 12 ம் திகதி அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கூறப்பட்டது போன்று 13.05.2025 திருக்கோவில் பொதுச் சந்தை ஸ்ரீ கற்பகப் பிள்ளையார் ஆலயம் முன்பாக உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்ம சாந்தி பிரார்த்தனை பூஜையும், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.Unknown 2 1 கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு

அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல இடங்களிலும் இந்நிகழ்வுகள் இடம் பெற்றதோடு நேற்றைய தினம் 17/05/2025 திருக்கோவில் தாண்டியடி பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி சங்கத்தின் ஆலோசகர், மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள், பிரதேச இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கினர் இவ்வேளை முள்ளி வாய்க்கால் நினைவுக்கஞ்சி தயார்படுத்தப்பட்டு கொண்டிருந்தபோது அங்கு வந்த திருக்கோவில் போலீசார் அங்கு கட்டப்பட்ட பதாதை தொடர்பில் கேள்வி எழுப்பியதோடு பதாதையிலிருந்த படங்கள் மற்றும் ஏன் எதற்காக இதை செய்கிறீர்கள் என கேட்டு வீடியோ படம் எடுத்து சென்றனர். ஆனாலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.