ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அடனியி (Kunle Adeniyi) மற்றும் மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குன்லே அடனியியின் பதவிக்காலம் நிறைவடைவதை முன்னிட்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குன்லே அடனியி 2022 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதியாக கடமையாற்றி வருகின்றார்.
குன்லே அடனியி பெண்களுக்கு எதிரான சவால்கள் மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்காக பல திட்டங்களை மேற்கொண்டு ஆதரவளித்துள்ளார்.
குன்லே அடனியி இலங்கைப் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பல மகத்தான பணிகளை ஆற்றியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது குன்லே அடனியின் மகத்தான பணிகளுக்கு பாராட்டும் வழங்கப்பட்டது.