ஐக்கிய இராட்சியத்தில் Palestine Action அமைப்புக்கு தடை ஏன்?
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுடைய நிலப்பகுதியை தொடர்ந்து அபகரித்து வருகின்றது. இதற்கு எதிராக அம்மக்கள் நீண்ட காலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இதில் பாலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டும், கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போயும் உள்ளனர்.
இந்த செயற்பாடு தொடரும் நிலையில்,இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். அதே நேரம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்து சென்றிருந்தனர். இந்த சூழலில் ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இஸ்ரேல் காஸா பகுதியை மனிதப் புதை குழியாக மாற்றி வருகின்றது. இதை யடுத்து உலகெங்கிலும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்த சூழலில், Palestine Action அமைப்பை பிரித்தானியா தடை செய்துள்ளது. இதையடுத்து பல மனித உரிமை அமைப்புக்கள் பல கலாச்சார அமைப்புகள் இந்த தடைக்குஎதிராக போராட்டங்கள் செய்து
வருகின்றன. இந்த நிலையில், காதர் மாஸ்டர் ஐக்கிய இராட்சியத்தில் Palestine Action அமைப்பு தடை செய்யப்பட்டமை குறித்து கூறுகையில்…
இந்த Palestine Action அமைப்பு தடை செய்யப்பட்டமைக்கு எதிராக லண்டனிலே பல பகுதிகளிலே போராட்டங்கள் நடைபெற்றன. Palestine Action என்ற அமைப்புக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கின்ற தடையானது ஜூன் 30 ஆம்திகதி ஹோம் செக்ரட்டரி கூப்பர் அவர் தான் இன்டீரியர் மினிஸ்டரும் ஒரு பில்லை அவசரமாக கொண்டு வந்தார். அதிலே (Palestine Action) அமைப்பை பிரதானப் படுத்திக்கொண்டு அதை பேசினாலும் அதை தனியாக முன்வைத்தால்அந்த மசோதா தோற்கடிக்கப்படும் என்பதற்காக ஒரு கபடத்தனமாக அவர் வேறு சில இரண்டு அமைப்புகளை கொண்டு வந்தார். அது எம்.எம்.சி முனாக்ஸ் மேடகால்ட் (MMC :Munax Metacald) என்ற ஒரு வலது சாரி வெள்ளை இனவாத அமைப்பு. அடுத்தது ஆர் ஐ எம் ரஷ்யன் இம்பீரியல் மூவ்மென்ட்.( Russian Imperial Movement) இதையும் பின்னிணைப்பாக சேர்த்து கொண்டு இவர்களை தடை செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய நோக்கமாக இருந்தது. இந்த இரு தடை செய்யப்பட வேண்டிய அமைப்புகளையும் கொண்டு வந்து அந்த மசோதாவைநிறைவேற்றினார். இது ஒரு கள்ளத்தனமாக நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா. வேடிக்கை என்னவென்றால், யூன் 30ஆம் திகதி கொண்டுவரப்பட்ட இந்த மசோதா, இரண்டாம் திகதி நிறைவேற்றப்பட்டது. அதாவது ஒரு 385 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும் 26 பேர் மாத்திரமே எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள்.
இதில் ஒரு அதிர்ச்சிகரமான விஷயம் என்ன வென்றால், எப்படி அந்த பாராளுமன்றத்தை திசை திருப்பி இவர்கள் கள்ளத்தனமாக இந்த வாக்கைப் பெற்றார்கள் என்பதுதான். தனியாக இந்த Palestine Action என்ற அமைப்புக்கு எதிராக மாத்திரம் அந்த மசோதா கொண்டுவரப்பட்டிருந்தால் அது தோற்கடிக்கப் பட்டிருக்கும். அங்கு இருக்கின்றவர்களுக்கு கொடுக்கப்பட்டது இந்த நாசி அமைப்புகளான மேற் குறிப்பிட்ட இரு அமைப்பையும் தடை செய்வதற் காககொண்டுவரப்படுகின்ற ஒரு மசோதா என்ற விம்பத்தை கொடுத்து இதனை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
எதற்காக இந்த Palestine Action-னுக்கு தடையை கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் செய்த அப்படி பாரதூரமான குற்றம் என்ன? இந்த மசோதாவை அவர்கள் Palestine Action – னுக்கு எதிராக கொண்டு வந்ததற்கு, அண்மையிலே பிரித்தானியாவின் மிகப்பெரிய ரோயல் ஏர்போர்ஸ் பேஸ் -சுக்குள் புகுந்த (Royal Air Force (RAF)) இரண்டு பேர் விமானத்திலே சிவப்பு நிறத்திலே பாலஸ்தீனுக்கு ஆதரவான வாசகங்களை வர்ணம் பூசினார்கள். அதை அவர்கள் தகர்க்கவில்லை. குண்டு வைக்கவில்லை. வர்ணம் பூசிவிட்டு வந்தார்கள். அது அவர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் பிரித்தானியா சட்டத்தின் படி இது ஒரு சட்ட விரோதமான நடவடிக்கை கிடையாது.
அடுத்த ஒரு சம்பவம், எல்பிட் சிஸ்டம் யுகே (Elbit Systems UK Israeli Arms Company or Principal Supplier of Military hardware to the IDF) என்று இஸ்ரேலுக்கு ஆயுதம் தயாரிக்கின்ற ஒரு தொழிற்சாலை Bristol – என்ற இடத்தில் இருக்கிறது. அதற்கு முன்னால் நின்று ஒரு பெண்ணும் ஒரு இளைஞரும் அந்த வாசலை மறித்தார்கள்.
அந்த தொழிற்சாலைக்கு தங்களுடைய ஆட்சேபனையைத் தெரிவித்தார்கள். அதே நேரம் வேறு சில இடங்களில் போராட்டக்காரர்கள் போராட்டம் செய்தார்கள். இந்த சம்பவங்களோடு உலகம் முழுவதும் இன்று பிரபலமாக இருக்கின்ற XR – என்ற எக்ஸ்டின்ஷன் ரெபலியன் ( Extinction Rebellion) அமைப்புடைய செயல்பாடுகளை நீங்கள் ஒப்பிடலாம். அவர்கள் மிக தீவிரமான ஆனால் வெகு ஜன போராட்டத்திலே இருக்கின்ற சுற்றாடல் ஆர்வலர்கள். இவர்கள் ராணியின் மாளிகைக்கு முன்னால் சென்று அந்த கேட்டை மறைத்து கொண்டு அங்கு ராணியுடைய கொடும்பாவியை ஊர்வலமாக கொண்டு சென்றார்கள். இப்படியான பல போராட்டங்களை செய்திருந்தார்கள்.
இப்படியான போராட்டங்கள் எல்லாம் இவர்களுடைய கண்ணை உறுத்தவில்லை. ஆனால் ஏன் பாலஸ்தீனியர்களுடைய போராட்டம் இவர்களுடைய கண்ணை உறுத்துகிறது. இங்கே பல கேள்விகள் வருகிறன. பாலஸ்தீனிய மக்க ளுக்கு அவர்களுடைய மண்ணிலே வாழ்கின்ற உரிமை இல்லை. அவர்கள் இன்று உணவுக்காக காத்துக்கிடக்கிறார்கள். அவர்களை இஸ்ரேல் சுட்டுக்கொல்கிறது. அந்த அநியாயத்தை கண்டிப் பதற்கு அந்த மக்களுக்கு அந்த நாட்டிலும் உரிமை இல்லை. இன்று அவர்களுக்காக குரல் கொடுக்கின்ற ஏனையவர்களுக்கும் இன்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
பாலஸ்தீன மக்களை நசுக்குகின்ற, அவர் களை என்னவும் செய்யலாம், அவர்களை குண்டு போட்டு கொல்லலாம்., பச்சை குழந்தைகளை கொல்லலாம். பெண்களைக் கொல்லலாம். இப்படி அந்த ஆக்கிரமிப்பாளருக்கு சாதகமாக இருக்கின்ற இந்த அமைப்பு முறை அதாவது, பாலஸ்தீனியர்களுக்கு அவர்களுடைய நாட்டிலே குரல் கொடுக்க முடியவில்லை. அதே நேரம் அவர்களுக்கு ஆதரவாக வெளிநாட்டிலும் குரல்கொடுக்க முடியவில்லை என்றால், நாங்கள் ஒரு விடயத்தை பார்க்க வேண்டும். ஏன் அந்த இஸ்ரேல் மக்கள் மீதுள்ள அனுதாபத்தினால் தான் இவர்கள் இந்த காரியத்தை செய்கிறார்கள் என்றால் அது அப்பட்டமான பொய்.
இஸ்ரேல் மக்களுக்கு உண்மையான பாதுகாப்பு எங்கே இருக்கிறது என்றால், அவர்களுடைய Iron Dome-மில் இல்லை. அமெரிக் காவுடைய ஆதரவிலில்லை. அவர்கள் அயலவர் களோடு ஒற்றுமையாக வாழ்வதில் தான் இருக் கிறது.
இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களுடைய நிலத்தை ஆக்கிரமித்து, இருக்கிறார்கள். ஆனாலும் ‘நீங்கள் இருங்கள், எங்களையும் இருக்க விடுங்கள்’ என்பதுதான் பாலஸ்தீனர்களுடைய கோரிக்கை யாக இருக்கிறது. அதையும் கொடுக்க மறுத்து ‘பக்கத்து நாடுகளை நாங்கள் ஆக்கிரமிப்போம், எங்கெங்கு நம்மவர்கள் வாழ்ந்தார்களோ அந்த இடமெல்லாம் எங்களுக்கு சொந்தம் என்று கூறி வாழ முடியாது.
ஆகவே இஸ்ரேலுக்கு ஆயுதம் தயாரிக் கின்ற ஆயுத தொழிற்சாலைகளை சரியாக குறி வைத்து போராட்டம் செய்தார்கள். அவர் கள் பிரயாணிகளுடைய விமானத்துக்கு வர்ணம் பூசவில்லை. அவர்கள் குண்டு போடுகின்றவி மானத்திற்கு தான் அவர்கள் வர்ணம் தீட்டினார்கள். இந்த செயலுக்கு தடை விதித்தால் கொலைகாரனை நீ கொலைகாரன் என்று சொல்வது குற்றம் என்பது போல ஆகிவிடும்.
அதே நேரம் பிரித்தானியாவின் இந்த கபட நாடகத்தை நாங்கள் பார்க்கலாம். 2000 ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத சட்டத்துக்கு கீழ்தான் இந்த இரு அமைப்புக்களும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இவர்களுடைய செயல்பாடுகள் எதுவுமே பயங்கரவாத செயலுக் குள் வராது. ஏனென்றால் இதனை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழு கொண்டு வந்த ஒரு தீர்மானத்திலே கூறப்பட்டுள்ளவை என்னவென்றால், உடைமைகளுக்கு சேதம் விளைவிப்பது பயங்கரவாத செயலாக ஆகிவிட முடியாது. அது உயிர்களுக்கும் சேதம் ஏற்படுத்தி இருந்தால் தவிர என்று ஒரு சரத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் 1566ம்தீர்மானம் 2004ல் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை வலுவாக ஆதரித்த நாடு பிரித்தானியா, இன்று அதே பிரித்தானியா, அதாவது எந்த ஒரு போராட்டத்திலும் சில வேளை சில உடைமைகளுக்கு சேதம் ஏற்படத்தான் செய்யும். ஏனென்றால் மக்கள் கொதித்தெழும்போது என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. போராட்டங்களை ஒழுங்கு செய்த அமைப்பை தடை செய்ய முடியாது. ஏனென்றால் எல்லோரையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியாது.(Royal Air Force (RAF)) என்ற அமைப்பு சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டது.
ராணியுடைய மாளிகைக்கு சென்று ராணியுடைய கொடும்பாவியை சவப்பெட்டியாக சுமந்து கொண்டு சென்றார்கள். அவர்களுடைய கேட்டைதிறக்கவிடாமல் அங்கே தமக்கு விலங்கிட்டுக் கொண்டு நிற்கிறார்கள். இந்த போராட்டத் தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பதனால் தான் அது ஒரு பயங்கரவாத தடை செயலாக கருதப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட யாராவது ஒரு சொத்துக்கு உடைமைகளுக்கு சேதம் ஏற் படுத்தினால் அவரைப் பிடித்து தண்டனை கொடுக்கலாம் அதுக்கு வேற சட்டம் இருக்கிறது. ஆனால் இந்த பயங்கரவாத தடை சட்டத்தை அதுக்குள்ளே கொண்டு வர முடியாது என்பது உலகறிந்த ஒரு உண்மை. அப்படியானால் இப் பொழுது இருக்கின்ற பிரச்சினை என்னவென்றால் பாலஸ்தீனுக்கு ஆதரவாக அல்லது இந்த அரசாங் கத்துக்கு பிடிக்காத யாருக்காவது ஒரு எதிராக ஒரு வர்ணம் தீட்டினால் அதை தற்கொலை குண்டுதாரி ஒருவர் சென்று பாராளுமன்றத்தை தாக்கியது போல ஒரு பயங்கரவாத குற்றமாக பார்க்கப்படும். இது பாலஸ்தீனர்களுக்கு மாத்திரமல்ல சாதாரண போராட்டங்கள் அனைத்துக்குமே இது ஒரு ஆபத்தான அச்சுறுத்தல். இதற்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்திருக்கிறார்கள். இப்பொழுது இந்த தடை சட்டத்திற்கு எதிராக குறித்த அமைப்பு நீதிமன்றம்போயிருக்கிறார்கள். அவசரமாக கூடிய நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பிக்கவில்லை. ஆனால் 21 ஆம் திகதி மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப் படும். அதனுடைய முடிவு எப்படி இருக்கும் என்று சொல்லி தெரியாது. ஆனால் பிரித்தானிய அரசாங்கத்துடைய கபட நாடகத்தை தான் நாங்கள் பார்க்கிறோம்.