உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது அசாத் மவுலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ச, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.
“தயவு செய்து, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை படியுங்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வழங்கியுள்ள சாட்சியங்கள் உட்பட.. குறித்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது” என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச டெய்லி மிரர் நாளிதழுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.