என்னதான் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் தமிழரசுக்கட்சியை சஜித்திற்கு ஆதரவாகத் திருப்பினாலும், இரண்டாவது அல்லது மூன்றாவது என்ற போட்டிநிலைக்குள்தான் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி இருக்கிறது.
சுமந்திரன் அணியின் ஆதரவு சஜித்தை முதலிடத்திற்கு கொண்டு வருமென இந்தியா நம்பலாம். ஆனால் தமிழரசுக்கட்சி Vs தமிழ்த்தேசிய பொது வேட்பாளர் மோதலால், அனுரகுமார முதியன்சேலாகே திசாநாயக்க பக்கம் தமிழர்களின் ஆதரவு சரியக்கூடிய நிலை தென்படுகிறது.
‘பழைய திருடர்கள் வேண்டாம். புதியவர் ஒருவருக்கு வாக்களித்துப் பார்ப்போம்’ என்கிற பொதுப்புத்தி மேலோங்குகிறது. அடுத்த கட்டமாக, தமிழ்த்தேசியமா? இலங்கை தேசியமா? என்ற அரசியல் கருத்தியல் விவாதம் , பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டோடு தீவிரமடையுமென எதிர்பார்க்கலாம்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியம், சனாபதித் தேர்தலில் இலங்கைத்தேசியம் பேசு பவர்களின் அரசியல் இரட்டை வேடம் இந்த தடவை மிகத் தெளிவாக அம்பலமாகப் போகிறது. இதன் மறுதாக்கம், வருகிற நாடாளுமன்ற, உள்ளூராட்சி சபை மற்றும் மாகாணசபை தேர்தல்களில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்துமென இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அச்சமடையலாம்.
சஜித்திற்காக பரப்புரை செய்யப்போவதில்லை யென மூத்தவர் சி.வி.கே.சிவஞானம் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக யாழ். செய்திகள் தெரி விக்கின்றன. அதுவே அச்சத்தின் முதல் வெளிப்பாடு.தொலை பேசி மேடையில் ஏறுபவர்களை மக்கள் குறித்து வைத்துக் கொள்வார்கள்.
தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் பிளவினை, அங்கிருக்கும் தென்னிலங்கை பேரினவாதக் கட்சிகளுக்கு ஆதரவான உறுப்பினர்கள் சிலர் பயன் படுத்துகிறார்கள்.அநுர அல்லது ரணில் சனாதிபதியானாலும், அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலில் சஜித் வெல் வார் என்கிற நமட்டுச் சிரிப்போடு கூடிய நம்பிக்கையில் பலர் இருப்பது தெரிகிறது.
இன்றுடன் தேர்தல் விஞ்ஞாபனச் சமர்ப்பணம் முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. சஜித்தின் தேர்தல் அறிக்கையில் சமஷ்டி இல்லை. ஆனால் சனாதி பதி தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய, ஈழமக்களின் சுயநிர்ணய உரிமையை கொள்கையளவில் ஏற்றுக் கொண்டவர்.
இந்த தீவிர தமிழ்த்தேசியவாதிகள் ஏன் சிறிலங்காவிற்கு ஆதரவளிக்கவில்லை?. இந்தக் கேள் விக்கான பதிலை எங்கு தேடுவது?. இரண்டாவது தெரிவாகக்கூட இவரை தமிழரசு கட்சி பிரகடனம் செய்யவில்லை.ஏனெனில் இவர்களின் வர்க்க பூர்ஷ்வா குணாம்சம் அப்படி இறுக்கமானது. தமிழ்த்தேசியமெல்லாம் வாக் குப் பெறுவதற்கான வாய் வார்த்தைகள். ஆதலால் விழிப்புணர்வே விடுதலைக்கான முதற்படி என்பதை புரிந்து கொள்வோம்.



