எதிர்க்கட்சிகள் எதிர்க்கட்சிகளாக இயற்கை அனர்த்தங்களில் செயற்படக்கூடாது : பா. அரியநேத்திரன்

இலங்கையில் கடந்த வாரம் நடந்த மிக மோசமான இயற்கை அனர்த்தமானது இலங்கையில் 24, மாவட்டங்களை பாதித்தது என்பது உண்மை. அதிலும் மலையகம், தென்பகுதிகளில் கடுமை யான வெள்ளம் புயல்காற்றால் உயிர்சேதங்களும் பொருளாதார அழிவுகளும் ஏற்பட்டன.
இயற்கை அழிவுகள் புவியியல் மாற்றம் வானிலை மாற்றத்தால் எதிர்பாராமல் ஏற்படுவது அதன் அழிவுகளில் இருந்து மக்கள் பாதுகாக்கப்படுவதற்கான முன் ஆயத்தங்களை ஆட்சியில் உள்ள ஆழும் தரப்பு, எதிர் தரப்பு, அரசசார்பற்ற அமைப்புகள்,உள்ளூர் சமூக அமைப்புகள் அனைவரும் அரசியல் வேறுபாடுகளை புறம்தள்ளி மேற்கொள்ளவேண்டும்.
தமிழில் ஒரு பழமொழி உண்டு “வெள்ளம் வரு முன் அணைகட்டவேண்டும்” இதன் அர்த்தம் ஒரு இடத்தில் வீடு, வளவு, பொது இடம் மழைநீரால் அல்லது குளத்து நீரால் வெள்ளம் வரும் பாதை(வழி) தெரிந்தால் அந்த நீர் உள்ளே வராமல் அணைகட்டிவிடுவது .
இந்தப்பழமொழி மூலம் இயற்கை அனர்த்தம் மூலமாக பாதிப்பு வரும் என கண்டால் அந்த இடத்தில் இருந்து மக்களை பாதுகாப்பாக முன்கூட்டியே பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்லுதல் அனர்த்தம் முடிவுற்றதும் திருப்பி மக்களை அங்கே குடியமர்த்தல்  என்பதை குறிக்கும்.
இதனை ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் முற்கூட்டி கவனம் செலுத்தவேண்டும் அப்படி கவனம் செலுத்தி மக்களை வெளியேற்றியிருந்தால் பல உயிரிழப்புக்களை தவிர்த்திருக்கலாம் என்பது உண்மை. அதனை செய்யத்தவறியது அநுர ஆட்சியாளர் களுடைய தவறுதான் இயற்கை அனர்த்தத்தின் வேகம் மழைவீழ்ச்சி அளவு புயல் சூறாவளி என்பன எந்த வேகத்தில் ஏற் படும் என்பதை எவரும் எதிர்பார்க்கமுடியாது.
தற்போது கடந்த மாதம் 2025, நவம்பர், 27, தொடக்கம்,30, வரை இடம்பெற்ற புயல், மழை, வெள்ளம் என்பன ஏற்படுவதற்கு முன்னர் வானிலை ஆராய்ச்சி நிலையத்தால் கூறப்பட்ட எதிர்வு கூறல்களை கேட்டு சில இடங்களில் மக்களை பாதுகாப்பாக தாழ் நிலங்களில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றினாலும் பல இடங்களில் மக்கள் வெளியேறவில்லை, அல்லது வெளியேற்றப்படவில்லை என்பது உண்மை. சில வேளைகளில் வானிலை அறிக்கையில் கூறப்படுவது நடைபெறாமல் போன சம்பவங்கள் பல உண்டு.
இப்போது இயற்கை அனர்த்தம்  ஏற்பட்டுவிட்டது இதனில் இருந்து மீளுவது எப்படி என்பதையே அனை வரும் சிந்திக்கவேண்டும். இலங்கையில் ஆளும் தரப்பு கட்சியாக ஒரு கட்சி தேசிய மக்கள் சக்தியில் 159 ஆசனங்களும், எதிர்கட்சிகளாக 10, கட்சிகளை பிரதிதி நித்துவம் செய்யும் 66 ஆசனங்களும் உள்ளடக்கிய 225, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆனால் இலங்கை அரசியலில் ஒரு பழக்கம் உண்டு ஆட்சி செய்பவர்கள் ஆளும்தரப்பாக இருந்தால் எதிர்கட்சிகளாக உள்ளவர்கள் ஆளும்தரப்பை குறை கூறி எதிரிக்கட்சிகளாக பார்க்கப்படும் கலாசாரம் 1948, தொடக்கம் 2025, இன்றுவரையும் உள்ளது.
கடந்த வாரம் இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட அழிவை  எதிர்கட்சி பாராளுமன்ற  உறுப்பினர்கள் ஒரு சிலர் அதனை ஆளும் தரப்பு செய்த “மனிதப்படுகொலை” என பாராளுமன்றில் கூறியுள்ளனர் இயற்கை அனர்த்தம் என்பது படுகொலை ஆகாது. இயற்கை அனர்த்தங்கள் இயற்கையாக மழை, வெள்ளம், காற்று, நெருப்பு, என்பனவற்றில் ஏற்படும் பேரழிவுகளாகும். அவை மனிதனால் நிகழ்த்தப்படும் படுகொலை போன்ற திட்ட மிட்ட செயல்களால் ஏற்படு வதில்லை. இயற்கையின் சீற்றத்தால் மனிதர் களுக்கும், உடைமைகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுவதால் அது அனர்த்தம் என அழைக்கப் படும்.
படுகொலை என்பது மனிதன் மனிதனை கொல் வதே படுகொலை மனிதன் எதிர்பாராத இயற்கை அனர்தங்களால் மரணிப்பது படு கொலை இல்லை  அது இயற்கை அனர்த்த உயிரிழப்பாகவே கூறப்படும். இயற்கை அனர்த் தம் காரணமாக இறந்தவர்களை படுகொலை என்று வர்ணிப்பது அரசியல் அநுபவம் அற்ற சொல்லாடலாகவே பார்கப்படும்.
தற்போதைய பேரனர்த்தத்தில் இருந்து மக்களை மீண்டெடுக்க கட்சி அரசியல், தனிநபர் அரசியல், எதிர்ப்பு அரசியல், என்பவற்றை தள்ளிவைத்து சகல தரப்புகளும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியது கட்டாயம்.
கடந்த வாரம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கூட்டாக கண்டி மாவட்டத்தில் அரச அதிபரிடம் சென்று இயற்கை அனர்த்தம் தொடர்பாக உரையாடியபோது அவர் மீது பிழை பிடிப்பதை போன்ற விமர்சனங்கள் முன்வைத்தமை தொடர் பாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட் டன.
எதிர்கட்சிகள் எதிரிக்கட்சிகளாக செய்படு வதை தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு படம் காட்டாமல் மனிதாபிமானப் பணிகளை செய்வதே இன்றைய தேவையாகும். வடகிழக்கை மையப்படுத்திய தமிழ்த் தேசிய கட்சிகள் தென்னிலங்கை எதிர்கட்சி களுடன் இணைந்து தென்பகுதிகளுக்கு சென்று தமது தனித்துவத்தை இழக்காமல் தென்பகுதி, மலையகப்பகுதிகளுக்கு தனித்துவமாக தனியாக தமிழ்தேசிய கட்சிகளாக தமிழ்தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்தேசிய கட்சி தலைவர்கள் உறுப்பினர்கள் கூட்டாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மனிதாபி மானப்பணிகளை செய்வதே சிறப்பான அரசியல் பணியாகும்.