ஊழலிற்கு எதிராக போராடுங்கள் – வர்த்தக சமூகத்தினர் மத்தியில் அமெரிக்க தூதுவர் கருத்து

பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானவை. ஆனால் இலங்கை சரியான பாதையில் பயணிக்கின்றது என  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமெரிக்க இலங்கை வர்த்தக பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

எதிர்காலத்தை கட்டியெழுப்புவது இலகுவான விடயமல்ல. சர்வதேச நாணயநிதியத்தின் ஈஎவ்எவ் திட்டம் பொருளாதார ஆட்சிமுறை சீர்திருத்தங்களையும் ஊழலிற்கு எதிரான போராட்ங்களையும்  கோருகின்றது.

பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானவை ஆனால் இலங்கை சரியான பாதையில் பயணிக்கின்றது.

எனக்கு புதிய ஜனாதிபதி புதிய பிரதமரை சந்தித்து இந்த விடயங்கள் குறித்து உரையாடுவதற்கான சந்தர்ப்பம் சமீபத்தில் கிடைத்தது என்றார்.