ஊரடங்கு உத்தரவு நீடிப்பு:அமைச்சர் டிரான் அலஸ் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (22) நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், நேற்று (21) இரவு 10 மணி முதல் இன்று (22) காலை 6 வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது ஊடரங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.