ஊடகவியலாளர் கபிலநாத்தின் 22 முகங்கள் நூல் வெளியீடு.

வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர் ந. கபிலநாத்தின் 22 முகங்கள் நூல் வெளியீடு எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஓய்வுபெற்ற வவுனியா கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க. சுவர்னராஜா தலைமையில் வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் இடம்பெற்றவுள்ள நிகழ்வில் பிரதம விருந்தினராக மூத்த ஊடகவியலாளரும் ஆய்வாளருமான தமிழ்நிதி அருணா செல்லத்துரை கலந்துகொள்ளவுள்ளதுடன் சிறப்பு விருந்தினராக வீரகேசரியின் பிரதம ஆசிரியர் எஸ். ஶ்ரீகஜனும் கெளரவ விருந்தினர்களாக பிரபல வர்த்தகர் ச. இராசலிங்கம் மற்றும் மாவீரன் பண்டாரவன்னியன் மறுமலர்ச்சி மன்றத்தின் செயலாளர் செ. சபாநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை தமிழ் தாய் வாழ்த்தினை செல்வி பாலேந்திரன் பானுஜாவும் வரவேற்புரையினை கோ. சிவநேசலிங்கமும் நூல் அறிமுகவுரையினை வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் திருமதி பத்மாவதி ஜெயச்சந்திரனும் நூல் ஆய்வுரையினை வவுனியா வடக்கு ஆசிரியர் வள நிலையத்தின் முகாமையாளர் சு. ஜெயச்சந்திரனும் நிகழ்த்தவுள்ளனர்.

கெளரவ பிரதியை நூலாசிரியரின் தந்தை செ. நவரத்தினம் பெறவுள்ளதுடன் நிகழ்ச்சியை ஊடகவியலாளர் கோ. ரூபகாந் தொகுத்து வழங்கவுள்ளார்.
sddfsdf ஊடகவியலாளர் கபிலநாத்தின் 22 முகங்கள் நூல் வெளியீடு.