நீர்கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் 29 வட்டாரங்களில் தேர்தல் வாக்களிப்பு நடைபெறுகிறது. 7 பிரதான கட்சிகளும் 11 சுயேட்சை குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன.
மன்னார் நகர சபையில் 18 உறுப்பினர்களும்,மன்னார் பிரதேச சபையில் 23 உறுப்பினர்களும்,நானாட்டான் பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும்,முசலி பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும்,மாந்தை மேற்கு பிரதேச சபையில் 24 உறுப்பினர்களும் உள்ளடங்களாக கட்சி மற்றும் சுயேற்சைக் குழு சார்பாக 103 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் மன்னார் நகரசபைக்கு 15 உறுப்பினர்களும், மன்னார் பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களும் ,நானாட்டான் பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும், முசலி பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும் ,மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களுமாக மொத்தம் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 114 வாக்களிப்பு நிலையங்களில்,வாக்களிப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.
யாழ் மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி வாக்களிப்பு சதவீதம் 6 சத வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடைபெறுகின்றது.
அதன்படி இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை 6,10,117 ஆகும், இதில் 18,342 பேர் அஞ்சல் வாக்காளர்களாகும்.
நுவரெலியா மாவட்டத்தில் 540 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
மேலும், அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக 6,352 அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் போக்குவரத்துக்காக அரச மற்றும் தனியார் வாகனங்கள் அடங்கலாக 672 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றது.
அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய 5 சபைகளுக்கும் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1731 பேர் போட்டியிடுகின்றனர்.
ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 154 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொலிசாரின் பாதுகாப்புக்கு அமைதியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் நடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்காக கூமாங்குளம் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் வாக்கினை பதிவு செய்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வவுனியா மாநகர சபைக்காக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தமது வாககினை பதிவு செய்தனர்.