அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் பெற்ற கூடுதல் உறுப்பினர் ஆசனங்களுக்காக பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உள்ளூராட்சி மன்றங்களில் ஆரம்ப கூட்டங்களைக் கூட்டுவதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன.
உள்ளூராட்சி மன்றங்களை நிறுவும் பணிகள் அடுத்த மாதம் இரண்டாம் திகதிக்குள் முடிக்கப்பட வேண்டும்,
மேலும் உள்ளூராட்சி மன்ற கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலை புதிய உறுப்பினர்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.
அதற்கு முன்பதாக ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும்.இதன்படி பெயர்களைப் பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தாமதமாகப் பெறப்பட்ட ஆவணங்களை அச்சிடும் பணி அடுத்த வாரத்தின் முதல் பாதியில் நடைபெறும், இதனால் உள்ளூராட்சிமன்றங்களின் வழக்கமான நடவடிக்கைகள் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பல முக்கிய கட்சிகள் கொழும்பு மாநகர சபைக்கான வேட்பாளர்களின் பட்டியலை இன்னும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.