சர்வதேச அளவில் தற்பொழுது நிலவும் போர்ச் சூழலை மைய மாக வைத்து, அதன் வரலாற்றுப் பின்னணியைப் பற்றிவிவாதிக்க இருக்கிறோம். குறிப்பாக, Petrol Dollars மற்றும் அதன் பின்புலம் குறித்து உரையாட, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளி யல் துறை மூத்த பேராசிரியர் கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி அவர்கள் இலக்கு மற்றும், உயி ரோடை தமிழ் வானொலி ஆகியவற்றிற்கு வழங்கிய நேர்காணல்.
கேள்வி :
பெற்றோல் டொலர்’ என்றால் என்ன? 1970 களுக்கு முற்பட்ட அதன் வரலாற்றையும், அது உருவான பின்னணியையும் கூற முடியுமா?
பதில் :
இரண்டாம் உலகப் போருக்குப் பின், உலகளாவிய வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான பொதுவான நாணய அமைப்பு எதுவும்இருக்கவில்லை. ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தை எந்த நாணயத்தில் செய்வது என்ற குழப்பம் நிலவியது. இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், அமெரிக்காவின் பிரிட்டன் வூட்ஸ் (Bretton Woods) என்ற நகரில் 37 நாடுகளின்பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. இந்த விவாதங்களின் அடிப்படையில் தான் சர்வதேச நாணய நிதியம்(IMF), உலக வங்கி (World Bank) மற்றும் பொதுவான வர்த்தக ஒப்பந்தமான GATT போன்றவை உருவாயின.
இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், சர்வதேச வர்த்தகத்தை முறையாகவும், பாதுகாப்பாகவும் கொண்டு செல்வதற்கானநாணய ஒழுங்குமுறையை ஏற்படுத்துவதா கும். எந்த நாணயத்தை பொதுவான வர்த்தக நாணயமாக ஏற்றுக்கொள்வது என்றகேள்வி எழுந்தபோது, அமெரிக்க டொலரை ஏனைய நாடுகள் ஏற்றுக்கொள்வதாகவும், அமெரிக்க டொலரின் மதிப்பைத்தங்கத்தின் அடிப்படையில் நிர்ணயிப்பதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 35 டொலராக நிர்ணயிக்கப்பட்டு, அமெரிக்க டொலருக்குத் தங்கம் அடிப்படையாக அமைந்தது. ஏனைய நாடுகள் தங்கள் நாட்டுநாணயத்தை அமெரிக்க டொலருடன் இணைக்கும் அமைப்பு உருவாக் கப்பட்டது. அதாவது, அமெரிக்கா ஒரு தலைமை நாடாக இருந்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக, 35 டொலரைக் கொடுத்தால் ஒரு அவுன்ஸ் தங்கத்தைத்திருப்பிக் கொடுப்பதாக அமெரிக்கா ஒப்புக் கொண்டது. இதனால், அமெரிக்க டொலருக்குத் தங்கத்தின் பாதுகாப்புபின்புலமாக இருந்தது. உலக வர்த்தகத்தில் இது தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது.
கேள்வி :
இந்த அமைப்பில் 70களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தங்கக் கட்டுப்பாட்டிலிருந்து டொலர் விடுவிக் கப்பட்டதன் பின்னணி என்ன?
பதில் :
1960களில் ஏற்பட்ட வியட்நாம் போர் மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட உள்நாட்டுப் பணவீக்கம் காரணமாக, அமெரிக்க டொலரின் மதிப்பில் தாக்கம் ஏற்பட்டது. அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு இது மிகப்பெரிய சுமையாக மாறியது. இதை உணர்ந்த ஏனைய நாடுகள், குறிப்பாக ஏற்றுமதியை அதிகம் செய்து இறக்குமதியைக் குறைவாகக் கொண்ட நாடுகள், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்க டொலர்களைக் கொடுத்து தங்கத்தைக் கொள்வனவு செய்ய முற்பட்டன. இதனால், அமெரிக்காவின் தங்கக் கையிருப்பு வெகுவாகக் குறையும் என்பதை உணர்ந்த அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், 1971ல் அமெரிக்க டொலருக்கான தங்கத்தின் மதிப்பீட்டை நிறுத்தி வைத்தார். இனி தங்கத்திற்குப் பதிலாக டொலரைக்கொடுக்க முடியாது என அறிவித்தார்.
இதனால், தங்கத்தின் பின்புலம் இல்லாமல் மற்ற நாடுகள் ஏன் டொலரை நம்ப வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அதேநேரத்தில், இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. அமெரிக்கா வழக்கம் போல இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்றது. இதனால் கோபமடைந்த அரபு நாடுகள், குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள், அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யக்கூடாது எனத் தடை விதித்தன. இது அமெரிக்காவுக்கு மிகப்பெரியபொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது.
கேள்வி :
சவுதி அரேபியாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?
பதில் :
இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, அப்போதைய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹென்றி கிசிஞ்சர் சவுதிஅரேபியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். அப்போ தைய மன்னர் பைசலுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அந்த உடன் படிக்கையின்படி, சவுதி அரேபியா தனது எண்ணெய் ஏற்றுமதிமுழுவதையும் டொலரிலேயே மேற்கொள்ளும். அதற்குப் பிரதியுபகாரமாக, அமெரிக்கா சவுதி அரேபியாவுக்கு முழுமையான பாதுகாப்பையும், இராணுவ உதவியையும் வழங்கும். மேலும், சவுதி அரேபியா இந்த வர்த்தகத்தின் மூலம் பெறும் டொலர் கையிருப்புகளை அமெரிக்காவில் உள்ள திரைசேரி முறிகளிலும் (Treasury Bonds) ஏனைய நிதி கட்டமைப்புகளிலும் வைப்புசெய்யும். இதுவே ‘பெற்றோல் டொலர் உடன்படிக்கை’ என அழைக்கப்பட்டது. தங்கத்திற்குப் பதிலாக எண்ணெய் இப்போது அமெரிக்க டொலருக்குப் பாதுகாப்பான அரணாக நின்றது. இந்த உடன்படிக்கை நாடுகளின் தலைவிதியைத் தீர்மானிக்கும்சக்தியாக மாறியது.
கேள்வி :
மற்ற ஓபெக் (OPEC) நாடுகள் எப்போது இந்த உடன்படிக்கையில் இணைந்தன?
பதில் :
சவுதி அரேபியா இந்த உடன்படிக்கையைச் செய்து கொண்ட உடனேயே, மற்ற ஆறு முக்கியமான எண்ணெய்ஏற்றுமதி நாடுகளும் வெவ்வேறு காலகட்டங்களில் இதில் இணைந்து கொண்டன. அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதிசெய்யக்கூடாது என ஒப்புக்கொண்ட நாடுகளே, இந்த உடன்படிக்கையின் பின்னர் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு இதில் இணைந்தன. அவர்களுக்குத் தங்களுடைய டொலர் கையிருப்புகளை முதலீடுசெய்ய வாய்ப்பு கிடைத்தது. மறுபுறம், அமெரிக்கா இந்த நாடுகளுக்குப் பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியது. இதனால் அமெரிக்க டொலர் ஒரு சர்வதேச நாணயமாக மாறியது மட்டுமல்லாமல், உலகளாவிய ரீதியில் இந்த நாணயத்தைப் பயன்படுத்தி மற்ற நாடுகளைக் கட்டுப்படுத்தவும், யுத்த உபகரணங்களாகப் பயன்படுத்தவும் வழிவகுத்தது.
கேள்வி :
பெற்றோல் டொலர் உடன்படிக்கையை மீறியதற் காகத்தான் சதாம் உசைன் மற்றும் கடாபி படுகொலை செய்யப்பட்டார்களா?
பதில் :
நீங்கள் குறிப்பிட்டது சரிதான். லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளும் இந்த பெற்றோல் டொலர் உடன்படிக்கையைப் பயன்படுத்தி அமெரிக்கா அடையும் நன்மைகளை உணர்ந்திருந்தன. அமெரிக்கா இந்த டொலர் கையிருப்புகளை வைத்துக்கொண்டு ஏனைய நாடுகளைக் கட்டுப்படுத்துவதையும், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் அரபு உலகம் முழுவதிலும் செல்வாக்கு செலுத்துவதையும் கண்டனர்.
இந்த பொறியில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக, ஈராக் அதிபர் சதாம் உசைன் டொலரில் அல்லாமல் யூரோவில் எண்ணெய் வர்த்தகத்தை செய்யப் போவதாக அறிவித்தார். இதுதான்அவரது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அமெரிக்கா மிகச் சூட்சுமமாக, ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக்கூறி, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் உத்தரவைப் பெற்று, இராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. ஈராக்குக்குள் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பது கூட்டணியில் இருந்தவர்களுக்குத் தெரியும். ஆனால், டொலரின் முதன்மைத்தன்மையைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காகவே சதாம் உசைன் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு, படுகொலைசெய்யப்பட்டார்.
அதேபோல், லிபியாவின் அதிபர் கடாபியும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் குரல் எழுப்பிய வர். அவரும் அமெரிக்காவின் செல்வாக்கைக் குறைக்க முயன்ற காரணத்தினால்தான், மிகச் சூட்சுமமான முறையில் அவரது சொந்தநாட்டுப் படையினராலேயே படுகொலை செய்யப்பட்டார். இந்த இரு உதாரணங்களும் டொலரின் முதன்மைத் தன்மையை அடிப்படையாக வைத்து அமெரிக்கா செலுத்தும் செல்வாக்கிற்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளாகக் கருதலாம்.
கேள்வி :
டொலருக்கு மாற்றாகச் சீன யுவானில் எண் ணெய் வர்த்தகம் நடைபெறுவது மற்றும் ‘ஸ்விப்ட்’ (SWIFT) அமைப்புக்கு மாற்றான சீன முயற்சிகள் பற்றி விளக்குங்கள்.
பதில் :
அமெரிக்கா டொலரைத் தன்னுடைய செல் வாக்கைக் காட்டவும், ஏகாதிபத்தியத்தை ஏற்காத நாடு களுக்கு எதிராகப்பொருளாதார யுத்தக் கருவியாகவும் பயன்படுத்தி இருக்கிறது. இந்த கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள ‘ஸ்விப்ட்’ (SWIFT) என்ற சர்வதேச நிதியியல் முகாமை அமைப்பு உருவாக்கப்பட்டது. இது வங்கிகளுக்கு இடையிலான செய்திப்பரிமாற்றத்தை எளிதாக்கும் ஒரு முறையாகும். ஸ்விப்ட் பெல்ஜியத்தில் நிறுவப்பட்டு, G10 நாடுகளின் மத்திய வங்கிகளால் மேற்பார்வை செய்யப்பட்டாலும், அமெரிக்க டொலருடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. உக்ரைன் போரின்போது ரஷ்யாவுக்கு எதிராகவும், ஈரானுக்கு எதிராகவும் ஸ்விப்ட் முறை பயன்படுத்தப்பட்டது.
இந்த நெருக்கடியை உணர்ந்த சீனா, டொலருக்கு மாற்றாகச் சீன நாணயத்தை சர்வதேச வர்த்தகத்தில் அதிகரிக்கஒழுங்குபாடுகளைச் செய்து வருகிறது. சீனா இருவகையான முறைகளை உருவாக்கி இருக்கின்றது. ஒன்று CIPS (Cross-Border Interbank Payment System), இது ஸ்விப்ட் போன்றது. சீன நாணயத்தில் கொடுக்கல் வாங்கல்களைத் தீர்க்க இதுஉதவுகிறது. ஆனால், சீன மத்திய வங்கிதான் இதனை முழுமையாகக் கையாளுகிறது என்பது ஒரு குறைபாடாகும். இதற்குமாற்றாக சீனா ‘mBridge’ என்ற மற்றொரு முறையையும் கொண்டு வந்திருக்கின்றது. இதில் சீன நாணயத்தோடு ஏனைய நான்கு அல்லது ஐந்து நாடுகளின் நாணயங்களும் தொடர்பு படுகின்றன. ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா கூடச் சீன நாணயத்தில் வர்த்தகம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. பல ஐரோப்பிய நாடுகளும் இதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. எனவே, பெற்றோல் டொலரின் செல்வாக்கைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.
கேள்வி :
ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கப் போர் மற்றும் சவுதி அரேபியாவின் பெற்றோல் டொலர் ஒப்பந்தம் புதுப் பிக்கப்படாதது டொலரின் முதன்மைத் தன்மையை எவ்வாறெல்லாம் பாதிக்கும்?
பதில் :
நிச்சயமாக. அமெரிக்கா இந்த பெற்றோல் டொலர் உடன்படிக்கையை அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுப்பதற்கான முக்கிய காரணம் பாதுகாப்பு. ஈரான் எப்போதும் அரபு நாடுகளுக்கு ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே இருந்து வந்திருக்கின்றது. அமெரிக்கா வின் பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் இதுவரை காலமும் அவர்கள் சமாளித்து வந்தனர். ஆனால், இந்தப் போர் ஆரம்பித்த பிறகு அமெரிக்காவின் பாதுகாப்பு என்பது உண்மையான பாதுகாப்புதானா? என்ற கேள்வி அவர்களுக்குள் எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகள் மீறப்பட்டு, ஈரானின் ஆயுதங்கள் வந்து விழக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. மேலும், நெருக்கடியான காலப்பகுதியில் அமெரிக்கா அவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக இஸ்ரேலைப் பாதுகாக்கச் சென்றிருக்கின்றது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்கா மீதான அவர்களின் நம்பிக்கையை வெகுவாகக் குறைத்திருக்கிறது.
சவுதி அரேபியா தனது பெற்றோல் டொலர் ஒப்பந்தத்தை 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலாவதியாகிய போதுபுதுப்பிக்கவில்லை. அதன் பிறகு சீனாவோடு இணைந்து யுவானில் வணிகம் செய்ய ஆரம்பித்தது. சவுதி அரேபியாவின் இந்தநடவடிக்கை அமெரிக்காவைத் தூண்டி இருக்கலாம். ஈரானைக் கட்டுப்படுத்தி எண்ணெய் வர்த்தகத்தைத் தன் கைக்குள் கொண்டு வராவிட்டால், சவுதி அரேபியா சீனப் பக்கம் போய்விடும் என்ற பயம் அமெரிக்காவிற்கு இருக்கிறது. இது நன்கு கணக்கிடப்பட்ட இராணுவ நடவடிக்கை. போர் என்று அறிவித்தால் போர் குற்றங்கள் வந்துவிடும் என்பதால் கவனமாகக்கையாண்டு வருகின்றனர். எது எப்படியாக இருந்தாலும், அரபு நாடுகளைப் பொறுத்தமட்டிலே அமெரிக்க டொலரின் முதன்மைத்தன்மை இனி இருக்கப் போவதில்லை.
கேள்வி :
பெற்றோல் டொலர் அன்றாட வாழ்வில் எத் தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
பதில் :
இலங்கை 2022ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்ததற்கு டொ லர் கையிருப்புகள்இல்லாமையே காரணம். எனவே, ஒவ்வொரு நாடும் டொலர் கையிருப்புகளைப் பேண வேண்டிய கட்டாயத்திற்குத்தள்ளப்பட்டது. இல்லாவிட்டால் வணிகம் செய்ய முடியாது என்ற அடிப்படைச் சூழல் உருவானது. இப்போது சீன நாணயமும்மாற்றாக உருவெடுக்கும்போது, நாடுகளுக்கு ஒரு புதிய வழி கிடைக்கிறது.
அமெரிக்க டொலர் இதிலிருந்து முழுமையாகநீங்கப் போவதில்லை. ஆனால், ஒரு ஒதுக்கு நாணயம் (Reserve Currency) என்ற அடிப்படையில் அமெரிக்க டொலரோடு சமமாக வேறு நாணயங்களும் வரும். அப்படி வரும்போது, அமெரிக்கா செலுத்தும் செல்வாக்கு படிப்படியாகச் சரியும். வளரும் நாடுகளுக்கு அது ஒரு மாற்று வழியைத் தரும்.
கேள்வி :
பெற்றோல் சார்ந்த உர உற்பத்திகள் மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதி, இந்தப் போர்ச் சூழலில் எவ்வாறுபாதிக்கப்படும்?
பதில் :
உண்மைதான். எண்ணெய் மற்றும் பெட் ரோலியப் பொருட்கள் மட்டுமல்லாது, பெட்ரோலை அடிப் படையாகக்கொண்டு மசகு எண்ணெயைச் சுத்திகரிக்கும் போது கிடைக்கும் ‘பைப்ரடக்ட்’ (Byproducts) மூலம் முக்கியமான விவசாயஉரங்கள் மற்றும் பிற இரசாயனங்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உலக நாடுகளுக்குத் தேவையான யூரியாவில் சுமார் 48% இந்த நீரிணை வழியாகத்தான் செல்கிறது. அதேபோல, பிற உரங்களுக்குத் தேவையான பாஸ்பரஸ்போன்ற உள்ளீடுகளும் இந்தப் பகுதியிலிருந்துதான் செல்கிறது. கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி கட்டணங் கள் அதிகரிக்கும்போது, உரங்களின் விலைகளும் அதி கரிக்கும். இது விவசாய உற்பத்தியின் செலவுகளை அதிகரித்து, உணவுப்பாதுகாப்பின்மையைக் கொண்டுவரும்.
மேலும், கணினித் துறை மற்றும் செமி கண்டக்டர் கள் (Semiconductors) உற்பத்திக்கான செலவுகளும் அதிகரிக்கும். கால்குலேட்டர் முதல் ஏவுகணை வரை அனைத்துப் பொருட்களின் உதிரிப்பாகங்களின் விலைக ளும் சடுதியாக அதிகரிக்கும். இது நாடுகளின் டிஜிட்டல் கட்டமைப்புகளைப் பாதிக்கும். AI தொழில்நுட்பம் மூலம் அறிவுப் பொருளாதாரத்திற்குப் மிகப்பெரிய அடியாக இது விழக்கூடும்.



