உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைப்பது குறித்து ஆராய்வு

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்கவுள்ளமை தொடர்பில்   கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் தமிழரின் பூர்வீக நிலங்களை அபகரிக்க சிறீலங்கா அரசு மிகவும் திட்டமிட்டு, தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமை  அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரன் ஆலயத்திலும் சில ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தன.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர்களான எம் .ஏ . சுமந்திரன், எஸ்.சிறிதரன் ஆகியோர் தலைமையில்     உருத்திரபுரீஸ்வரன் ஆலய மண்டபத்தில்,  கலந்துரையாடல் ஒன்று   நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த ஆலய வளாகத்தில், அகழ்வு பணிகள் மேற்கொள்ளவதற்கு எடுத்த முயற்சியினை அடுத்து, அப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம் என்ற காரணத்தினால், அது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.